தலித் கிருஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு! ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

image

image

image

தஞ்சை.ஆக.10., தலித் கிருஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு தஞ்சாவூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழ் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் ஏராளமான கிறித்துவ சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி பேசிய உரையின் சுருக்கம் வருமாறு:

1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று தான், அன்றைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்து மதத்தை தவிர்த்த இதர மதத்தில் உள்ள தலித்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்ற ஆணையை வெளியிட்டார். அதில்தான் தலித் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அந்த நாளைதான் அவர்கள் கறுப்பு தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.

1956 ல் சீக்கிய மதத்தை சேர்ந்த தலித்துகளுக்கும், பெளத்த மதத்தை சேர்ந்த தலித்துகளுக்கும் SC பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீடு வழங்கினார்கள். ஆனால் தலித் கிறிஸ்தவர்களை அதில் திட்டமிட்டு ஒதுக்கினார்கள்.

இந்திய கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் தலித்துகள்தான். எனவே சமூக நீதியை மதிக்கும் வகையில் அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்

மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது தேர்தல் அறிக்கையில் இது குறித்து வாக்குறுதி அளித்தார்கள்.

நானும் மஜக வின் சார்பில் இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் பேசுவேன்.

இவ்வாறு பேசினார்

இந்நிகழ்வில் மஜக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார், தஞ்சை ஆயர் டாக்டர். M. தேவதாஸ் அம்புரோஸ், பேரட்திரு. T. ஞானப்பிரகாசம், அருட்திரு. J.அமலதாஸ் ஜான், திரு. சின்னப்பன், திரு. ASA தலித்தாஸ், திரு. P.K. பிரான்சிஸ், திரு. ரெனால்டு ரீகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தஞ்சை தெற்கு மாவட்டம்.
10.08.17