You are here

மாணவர் பயிற்சி முகாம் பணிகளில் மாணவர் இந்தியா.

image

image

வருகின்ற மே 13,14 ஆகிய இரு தினங்கள் சென்னை,  மாமல்லபுரத்தில் மாணவர் இந்தியா சார்பில் சிறப்பு திறன் மேம்பாடு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 250 மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 75 மாணவர்களுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் வகுப்பெடுக்க உள்ளனர்.

முகாம் நடத்துவதற்கான பண்ணை வீட்டை இன்று (08.05.2017) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், காஞ்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சர்தார் மற்றும் 
மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் : ஊடக பிரிவு
#மாணவர்_இந்தியா
08.05.2017

Top