நாகை.மே.07., சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தீர்க்க பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களின் ஆலோசனைக்கிணங்க சட்டமன்ற அலுவலகத்தில் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 07-05-2017 இன்று மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
மாநில துணைச்செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் கலந்துகொண்டு பந்தலை திறந்துவைத்தார்.
மாநில விவசாய அணியின் செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் தோப்புத்துறை சேக் மன்சூர், நாகை நகர செயலாளர் கண்ணுவாப்பா என்கிற சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நாகை நகர மஜக சார்பில் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு தினமும் மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்படும்.
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
நாகப்பட்டினம் மாவட்டம்
07-05-2017