அறிஞர்களை மதிக்கும் சமூகமே உன்னதமானது! நாகூரில் நூல் வெளியீட்டு விழாவில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!

நாகை. ஏப்.29., நேற்று (28/04/2018) நாகூரில் “வெள்ளி மணியில் துள்ளிய துளிர்கள்” என்ற நூலை நாகூரின் புகழ்பெற்ற எழுத்தாளர் மு.அ.அபுல் அமீன் என்பவர் எழுதியிருக்கிறார்.

இவ்வெளியீட்டு விழா நாகூரில் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் V.சாதிக் தலைமையில் நடைபெற்றது. இந்நூலை நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அவரது உரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

நாகூர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். இந்த ஊரில் பல எழுத்தாளர்களும், இலக்கிய வாதிகளும், படைப்பாளிகளும் உருவாகி இருக்கிறார்கள். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் நாகூரை சேர்ந்தவர்கள் பல பத்திரிக்கைகள் நடத்தியிருக்கிறார்கள். இன்றும் பலர் அப்படி திகழ்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு நாகூர் முஸ்லிம் சங்கம் ஊக்குவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

இது போட்டியும், போராமையும் நிறைந்த உலகம். யாருக்கும் நல்ல பெயர் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எவ்வளவு நல்லது செய்தாலும் கடைசியில் கெட்ட பெயரே மிஞ்சிகிறது. இதநாலையே நல்லவர்களும், நேர்மையானவர்களும் பொது வாழ்வுக்கு வர அஞ்சுகிறார்கள்.

இங்கு நடிகர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறார்கள். ஆனால் வாழும் காமராஜராகவும், கக்கனாகவும், காயிதே மில்லத்தாகவும் நடமாடும் அய்யா நல்லக்கண்ணு அவர்களை யாராவது மதிக்கிறார்களா? இது தான் இன்றய தமிழ்நாடு.

ஒரு பணக்காரன் குடியிருக்கும் வீட்டை எல்லோரும் அடையாளம் காட்டுகிறார்கள் ஆனால், ஒரு படைப்பாளியிருக்கும் வீட்டை தெரியாது என்கிறார்கள். இத்தகையை நிலையில் அறிவாளிகளை, படைப்பாளிகளை, நல்லவர்களை அடையாளம் கண்டு அவர்களை எல்லாம் ஊக்குவிக்க வேண்டும். அறிஞர்களை மதிக்கும் சமுதாயம் தான் உன்னதமான சமுதாயமாகும்.

ஊக்கு விற்பவனை, ஊக்கு வித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்று கவிதை பாடினார் கவிஞர் வாலி அதுதான் உண்மை.

நாகூர் என்பது சமுக நல்லிணக்கம் நிறைந்த ஊராகும். அதை தொடர்ந்து பேணிகாக்க வேண்டும்.

மத வெறி, சாதி வெறி, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை எந்த மதத்தின் பெயரால் உருவானாலும் அதை எல்லோரும் இணைந்து எதிர்க்க வேண்டும்.

இன்று வாட்ஸ் ஆப், முகநூல்களில் பொறுப்பில்லாமல் எதையாவது எழுதி பதற்றத்தை தூண்டுகிறார்கள். உள் சண்டைகளை அதில் விவாதிக்கிறார்கள். நாடும், சமூகமும் எவ்வளவோ பிரச்சைனைகளில் சிக்கி தவிக்கும்போது நமது அறிவையும், உழைப்பையும், நேரத்தையும் வீணடிக்கக் கூடாது.

பொது சமூகத்தோடு இணைந்து பிரச்சனைகளை எதிர்க்கொள்ள பழக வேண்டும். நம்மை நாமே தனிமை படுத்திக் கொள்ளக் கூடாது. அதுபோல் RSSக்கு நம்மையும் அறியாமல் ஆள்சேர்த்து விடும் வேலையை செய்து விடக் கூடாது. நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான இந்துக்கள் மத வெறியை எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அவர்களை அரவணைக்காமல் அவர்களோடு, பயணிக்காமல், எதையும் சாதிக்க முடியாது. இதுதான் எதார்த்தம்.

இங்கு வெளியிடப்பட்டிருக்கும் “வெள்ளி மணியில் துள்ளிய துளிர்கள்” நூலைப் படித்தேன். அதில் 249 பக்கத்தில் நீரின்றி நிலைக்காது உலகம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரை, மார்க்க அடிப்படையில், தண்ணீர் மேலாண்மை பற்றி பேசுகிறது. அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

பணம் கொடுத்து இந்நூலை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள். வங்காளம், மராட்டியம், மற்றும் மலையாளத்தில் ஒரு நூல் வெளிவந்தால், ஒரு வருடத்திற்கு உள்ளாகவே இரண்டாம் பதிப்புக்கு சென்று விடுகிறது.

ஆனால் தமிழில் இந்நிலை இல்லை. இது மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அளவில் முதல் நிலை மதிப்பெண்கள் எடுத்த பல்வேறு சமூகங்களை சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நாகூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
28-04-2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*