மஜக நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக.! அம்பை சட்டமன்ற தொகுதியில் இலவச கண்சிகிச்சை முகாம்.!!


நெல்லை ஜன.17.,

மனிதநேய ஜனநாயக கட்சி-யின் நெல்லை மாவட்ட, அம்பை சட்டமன்ற தொகுதி, அம்பை ஒன்றியம் சங்கரபாண்டியபுரம் கிளை, பாத்திமா நகர் ஜீம்ஆ பள்ளி ஜமாத் மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகச்சை முகாம் பாத்திமா நகர் ஜீம்ஆ பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமை மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவங்கி வைத்தார், மாவட்ட துணை செயலாளர் செய்யது அலி, அம்பை ஒன்றிய செயலாளர் அன்சர்பாபு, ஒன்றிய துணைசெயலாளர் ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பாத்திமா நகர் ஜமாத் தலைவர் சேக் இப்ராஹிம், ஜமாத் செயலாளர் பீர்ஷா, ஜமாத் பொருளாளர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்

முகாம் ஒருங்கிணைப்பை சங்கரபாண்டியபுரம் கிளை செயலாளர் A.செய்யதுஅலி, கிளை பொருளாளர் R.மன்சூர், நியாஸ், ஆசிக், ரசீத் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இம்முகாமில் நூற்றூக்கனக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர், மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
17-01-2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.