ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி…திருவாரூரில் துண்டு பிரசுர பரப்புரை தொடக்கம்!


ஜன.17,

மத்திய அரசின் 3 உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் எதிர்வரும் ஜனவரி 21 அன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது.

இதற்கு மனிதநேய ஐனநாயக கட்சி கள ஆதரவு அளித்துள்ளது.

இன்று இதற்கு முன்னோட்டமாக திருவாரூரில் துண்டு பிரசுர பரப்புரை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் காவிரி உரிமை மீட்பு குழு தலைவர் பெ.மணியரசன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.

தோழர் பெ.மணியரசன் அவர்கள் துண்டு பிரசுரங்களை வினியோகித்து பரப்புரையை தொடங்கி வைத்தார்.

தோழர் காவிரி தனபாலன் அவர்கள் முழக்கங்களை எழுப்பி நிறைவு செய்தார்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், மக்கள் கூடுமிடங்களில் துண்டு பிரசுர பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று கூறினார்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களின் அபாயங்களை தோலுரிக்கும் வகையில் துண்டு பிரசுரம் இருப்பதால் அவை மிகப்பெரும் விழிப்புணர்வை மக்களிடம் தூண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இன்றைய நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், பொருளாளர் ஷேக்அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் நத்தர் கனி, செய்யது மீரான், விவசாய அணி மாவட்ட செயலர் எரவாஞ்சேரி நஜ்முதீன், கொள்கை விளக்க அணி மாவட்ட செயலாளர் லியாக்கத் அலி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஆசிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சித்திக் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.