ஆசிபா விவகாரம் மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டம் மஜக பங்கேற்பு!

மதுரை.ஏப்.29., காஷ்மீர் மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு எல்லா இயக்க அரசியல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள ஜமாத் மற்றும் பல்வேறு இயக்க கட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மஜக தெற்கு மாவட்ட செயலாளர் மொய்தீன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார் ஆகியோர் கலந்துண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் பாரூக் அவர்கள் போராட்ட வியூகங்கள் குறித்த சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்தார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம்.
29-04-2018