மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

திருப்பூர்.ஏப்.28., திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு 7மணியாளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் முஸ்தாக் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது, கட்சியின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் மாவட்ட துணைச்செயலாளராக மாஸ்கோ நகர் லியாகத் அலி தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் J.மீரான், ஆகாரம் அக்பர் அலி, ரஹ்மான், மன்சூர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்கர், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க செயலாளர் சாகுல், மனித உரிமைகள் அணி மாவட்ட செயலாளர் J.செளகத் அலி, மாவட்ட பொருளாளர் சாகுல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளபில் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசீக், லியாகத் அலி, சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
28-04-2018