நாகை.மே.09., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
இதில் நாகை நகராட்சி ஆணையர், திருமருகல் மற்றும் நாகை ஒன்றிய BDOக்கள், பொறியாளர்கள் அடுத்தடுத்து கலந்துக் கொண்டனர்.
இதில் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அடுத்தக்கட்ட திட்டமிடல்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி தனது 2017-2018 ஆண்டுக்கான இரண்டு கோடி ரூபாய் நிதியிலிருந்து திருமருகல் ஒன்றியத்திற்கு 50 லட்சம், நாகை நகராட்சிக்கு 47 லட்சம், நாகை ஒன்றியத்திற்கு 25 லட்சம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு 15 லட்சம் என ஆகமொத்தம் 1 கோடியே 37 லட்சம் ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தார்.
பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். குடிநீருக்காக தனது நிதி ஒதுக்கீடு குறித்தும், அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
நாகை, நாகூர் கடற்கரைகளின் மேம்பாடு, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், திட்டச்சேரியில் புதிய ரேஷன் கடை ஆகியவை குறித்தும் இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
09/05/2017