கோவை.ஜூலை.20 : மனிதநேய ஜனநாயக கட்சியின் வணிகர் பிரிவான கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் MJVS மாவட்ட செயலாளர் அக்பர், முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள் வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். ஜமேஷா 9566666707 லீட்ஸ் பஷீர் 9444884360 நெளபல் பாபு 9843632902 இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று GSTவரி விதிப்பை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நடத்தும் கடை அடைப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் களந்துகொள்ளும் என்றும், ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் முடிவுசெய்யப்பட்டது. மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்திற்குட்பட்ட நகைகடை பிரிவு, ஜவுளிப்பிரிவு, ரெடிமேட் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு புதிய கிளைகள் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 19.07.2017.
Author: admin
MLA-க்களுக்கு சம்பள உயர்வு! தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்பு!
சென்னை.ஜூலை.19., சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளத்தை உயர்த்த வேண்டும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் 16வது சட்டப்பேரவையில் முதன் முதலாக குரல் கொடுத்தார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானிய கூட்டத்தொடரிலும், 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவை மானியத் கூட்டத்தொடரிலும் இது குறித்து விரிவாக பேசினார். பிற மாநிலங்களில் இதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மகாராஷ்டிரா, தெலுங்கான, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றரை லட்சத்தை தாண்டி சம்பளம் கொடுக்கப்படுவதையும், அருகில் உள்ள புதுச்சேரியில் கூட அறுபதாயிரம் மேலும் சம்பளம் கொடுக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். சம்பளம் நிறைவாக கொடுத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்ற சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்-வான்- யூ அவர்களின் கருத்தையும் எடுத்துரைத்தார். இதை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்றனர். தொகுதி மக்களின் கோரிக்கைகளை செயல்படுத்தவும், தேவைக்கேற்ப திட்டப் பணிகளை நிறைவேற்றவும் தொகுதி நிதியை உயர்த்தி ஒதுக்க வேண்டும் என்றும். கேரளாவில் வருடத்திற்கு 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இக்கோரிக்கை வலுப்பெற்று இக்கூட்டத் தொடரில்
உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும்!
சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே; உலக அளவிலே அடுத்த நூறு ஆண்டுகளிலே அழியும் மொழியின் வரிசையிலே தமிழ் எட்டாவது இடத்தில் இருப்பதாக UNESCO அமைப்பு எச்சரித்திருக்கின்றது. இந்த நிலையிலே, சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்தி, சமஸ்கிருதம் ஆகியவை தவிர்த்து, இதர மொழி ஆய்வு மையங்களை அந்தந்த மாநில மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டு வர NITI Aayog பரிந்துரைத்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிப் பணிகள் இந்த நிர்வாகத்தின் நிதியோடுதான் நடைப்பெற்று வருகின்றன. பழந்தமிழ் நூல்களை, ஓலைச் சுவடிகளுடன் ஒப்பிட்டு, ஆய்வுப் பதிப்புகளை வெளியிடும் திட்டமும் இதன் மூலமே நடைபெற்று வருகிறது. சமஸ்கிருதத்திற்கு உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை தொடங்க உதவும் மத்திய அரசு, தமிழை பாதுகாக்கும் வகையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தொடர்ந்து தன்னாட்சி அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு தலையிட்டு, தமிழை பாதுகாக்க
மஜக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாக கூட்டம்! மாநில பொருளாளர் பங்கேற்பு!
இராமநாதபுரம்.ஜூலை.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் ஆலோசனை கூட்டம் மற்றும் பரமக்குடி நகரம் எமனேஸ்வரம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (17.07.2017) நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பரமக்குடி நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி அவர்களின் திருமணத்திற்கு பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, தலைமை ஒருங்கினைப்பாளர். மௌளா M.நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதின் உலவி ஆகியோரை நேரில் சென்று அழைப்பிதல் கொடுப்பது என்றும், 2. எதிர்வரும் 06/08/17 அன்று பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது என்றும், 3. 06/08/17 அன்று மாலை மாநில நிர்வாகிகளை அழைத்து கருத்தரங்கம் நடத்துவது என்றும், 4. மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்த்து புதிய கிளைகளை உருவாக்குவது... ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், அப்துல் கஃபூர், பைசல்ரசீத், அப்துல்நசீர், பரமகுடிநகர செயலாளர். ஷாகுல், துணை செயலாளர் ஜாஃபர்அலி, கலிஃபதுல்லாஹ், ஷமிர், ரஹ்மான், மாணவர் இந்தியா செயலாளர்
தமிழக முதல்வருடன் M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு!
#தமிழக_முதல்வருடன் M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு! (நீட்தேர்வு, கதிராமங்கலம், கம்பம் வழக்கு, சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக) இன்று (18.7.17) மதியம் 3 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் முதல்வர் அறையில் சந்தித்தனர். NEET தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுக்க வேண்டிய முன் முயற்சிகள் குறித்து மூவரும் கருத்து தெரிவித்து, அது தொடர்பாக மாணவர்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். உடனே அதற்கு நாளையே சந்திக்கலாம் என ஒப்புக் கொண்டார். பிறகு MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்வது குறித்து மீண்டும் நினைவூட்டினர். அது குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என முதல்வர் பதிலளித்து நம்பிக்கையூட்டினார். கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குள் வாபஸ் பெற வேண்டும் என்றதற்கு, அங்கு நிலைமை சுமூகமாகி வருகிறது. நிலைமை சீரானதும் வழக்குகள் வாபஸ் பெற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார். பிறகு, தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து