இராமநாதபுரம்.ஜூலை.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் ஆலோசனை கூட்டம் மற்றும் பரமக்குடி நகரம் எமனேஸ்வரம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (17.07.2017) நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பரமக்குடி நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி அவர்களின் திருமணத்திற்கு பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, தலைமை ஒருங்கினைப்பாளர். மௌளா M.நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதின் உலவி ஆகியோரை நேரில் சென்று அழைப்பிதல் கொடுப்பது என்றும்,
2. எதிர்வரும் 06/08/17 அன்று பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது என்றும்,
3. 06/08/17 அன்று மாலை மாநில நிர்வாகிகளை அழைத்து கருத்தரங்கம் நடத்துவது என்றும்,
4. மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்த்து புதிய கிளைகளை உருவாக்குவது…
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், அப்துல் கஃபூர், பைசல்ரசீத், அப்துல்நசீர், பரமகுடிநகர செயலாளர். ஷாகுல், துணை செயலாளர் ஜாஃபர்அலி, கலிஃபதுல்லாஹ், ஷமிர், ரஹ்மான், மாணவர் இந்தியா செயலாளர் ஆசிக் ஃபைரோஸ், எமனேஸ்வரம் செயலாளர் ஹபிப் ரஹ்மான் மற்றும் இலியாஸ், துல்கரனை ரசாக், தொண்டரனி ஆசிக் ரஹ்மான் ஆகியோர் மற்றும் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
இராமநாதபுரம் மாவட்டம்.
18.07.17