சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே;
உலக அளவிலே அடுத்த நூறு ஆண்டுகளிலே அழியும் மொழியின் வரிசையிலே தமிழ் எட்டாவது இடத்தில் இருப்பதாக UNESCO அமைப்பு எச்சரித்திருக்கின்றது. இந்த நிலையிலே, சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்தி, சமஸ்கிருதம் ஆகியவை தவிர்த்து, இதர மொழி ஆய்வு மையங்களை அந்தந்த மாநில மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டு வர NITI Aayog பரிந்துரைத்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிப் பணிகள் இந்த நிர்வாகத்தின் நிதியோடுதான் நடைப்பெற்று வருகின்றன. பழந்தமிழ் நூல்களை, ஓலைச் சுவடிகளுடன் ஒப்பிட்டு, ஆய்வுப் பதிப்புகளை வெளியிடும் திட்டமும் இதன் மூலமே நடைபெற்று வருகிறது. சமஸ்கிருதத்திற்கு உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை தொடங்க உதவும் மத்திய அரசு, தமிழை பாதுகாக்கும் வகையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தொடர்ந்து தன்னாட்சி அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு தலையிட்டு, தமிழை பாதுகாக்க முன்முயற்சிகளை எடுக்க வேண்டுமென்று இந்த அவையிலே கேட்டுக் கொள்கிறேன்.
மிக முக்கியமான கோரிக்கை;
மேலும், தமிழக அரசின் சார்பில் உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை நான் இங்கே முன்வைக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) ஏற்கனவே சென்னையிலும், தஞ்சாவூரிலும் இந்த மாநாடுகள் நடைப்பெற்றன. இதனை மீண்டும் சென்னை அல்லது மதுரையில் நடந்த வேண்டும்.
இதன் மூலம் செம்மொழி தமிழை பாதுக்காக்கும் முயற்சிகளை வலிமைப் பெற செய்ய முடியும் என்பதையும், உலகத் தமிழர்களை ஒன்றுகூட செய்ய முடியும் என்பதையும் இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
தகவல்;
சட்டமன்ற வளாக செய்தியாளர்கள் குழு,
#MJK_IT_WING
சென்னை
19.07.17