நோன்பு கஞ்சியை எல்லோருக்கும் வழங்கி மகிழ்வோம்!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு..)

கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ரமலானினும் #நோன்பு_கஞ்சி-யை அனைத்து சமூக மக்களுக்கும் கொண்டு செல்வதை பரப்புரையாகவே முன்னெடுத்து வருகிறேன். அதை இவ்வாண்டும் வலியுறுத்திக்கிறேன்.

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் நோக்கோடு முதல் பிரதமர் நேரு அவர்கள் உருவாக்கிய அணுகுமுறைதான் #இஃப்தார் நிகழ்ச்சிகள் ஆகும். இதில் எல்லா சமூக மக்களும் ஒன்றுக்கூடி விருந்துண்டு மகிழ்வது நல்ல கலாச்சாரமாக மாறியிருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், மதரஸாகளிலும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் இந்து, கிறிஸ்தவ, தலித் சகோதர்களை அழைத்து நோன்பு கஞ்சியை அவர்களுக்கு பரிமாறிட வேண்டும். இதன்மூலம் சமூக நல்லிணக்கைத்தையும், புரிதலையும், உறவுகளையும் வளர்த்து எடுக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்கள் வீதிகளிளும், அடுக்குமாடி வீடுகளிலும் உள்ள சகோதர்களுக்கு நோன்பு கஞ்சியை அன்போடு அனுப்பிவையுங்கள். பொது இடங்களில் நோன்பு கஞ்சியை வினியோக்கிகும் பணியைக்கூட செய்யலாம்.

ஜமாத்துல் உலமா, தமுமுக, IKP, ஜமாத்தே இஸ்லாமி, TNTJ, PFI, JAQH, INTJ, போன்ற சமூக அமைப்புகள், இதை சமூக நல்லிணக்க பணியாக முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

“மனிதர்களில் மிக சிறந்தவர்கள் யார் என்றால், இணக்கத்தை ஏற்ப்படுத்துபவர்கள் தான் என திருகுர்ஆன் போதிக்கிறது.” அன்பு, இரக்கம், மன்னிப்பு, இணக்கம், சகோதர்த்துவம் ஆகியன பூத்து குலுங்கும் புனித ரமலானில், இந்த அழகிய பணியை முன்னெடுப்போம்.

ரமலான் பிறை 20 முதல் 27 வரை ஒருவாரக் காலம் இப்பணிகளை செய்வோம்.

அன்புடன்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
04/06/2018.