You are here

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு  உதவிகள்..! மஜக சார்பில் விநியோகம்..!!

காஞ்சி.ஜூன்.04., மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி தெற்கு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அகதிகளாக வசித்துவரும் #ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நேற்றைய தினம் 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களின் அறிவுறுத்தளின் பேரில், மாநில செயலாளர் எ.சாதிக் பாஷா அவர்கள் தலைமையில் காஞ்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அம்மக்களுக்கு ஸஹர் மற்றும் இஃப்தாருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

மொத்தம் 38 குடும்பங்களுக்கு தேவையான சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா, சர்க்கரை போன்ற அத்தியாவசியமான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் யு.ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் அப்துல் சர்தார், மாவட்ட இளைஞரணி செயலாளர் இனாயத்துல்லாஹ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் தமீம் அன்சாரி, கானத்தூர் தீன் பாய் ஆகியோர் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING
#மஜக_காஞ்சி_தெற்கு_மாவட்டம்

Top