சென்னை.ஜூலை.19., சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளத்தை உயர்த்த வேண்டும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் 16வது சட்டப்பேரவையில் முதன் முதலாக குரல் கொடுத்தார்.
2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானிய கூட்டத்தொடரிலும், 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவை மானியத் கூட்டத்தொடரிலும் இது குறித்து விரிவாக பேசினார்.
பிற மாநிலங்களில் இதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மகாராஷ்டிரா, தெலுங்கான, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றரை லட்சத்தை தாண்டி சம்பளம் கொடுக்கப்படுவதையும், அருகில் உள்ள புதுச்சேரியில் கூட அறுபதாயிரம் மேலும் சம்பளம் கொடுக்கப்படுவதை சுட்டிக் காட்டினார்.
சம்பளம் நிறைவாக கொடுத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்ற சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்-வான்- யூ அவர்களின் கருத்தையும் எடுத்துரைத்தார். இதை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்றனர்.
தொகுதி மக்களின் கோரிக்கைகளை செயல்படுத்தவும், தேவைக்கேற்ப திட்டப் பணிகளை நிறைவேற்றவும் தொகுதி நிதியை உயர்த்தி ஒதுக்க வேண்டும் என்றும். கேரளாவில் வருடத்திற்கு 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இக்கோரிக்கை வலுப்பெற்று இக்கூட்டத் தொடரில் தனியரசு MLA, மலேசிய பாண்டியன் (காங்கிரஸ்), முருகுமாறன் MLA (அதிமுக- காட்டுமன்னார்குடி) ஆகியோரும் வலியுறுத்தி பேசினார்.
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள், இதுகுறித்து சிறப்பாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
அதாவது,
MLA சம்பளம் 55 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தொகுதி, மேம்பாட்டு நிதி 2 கோடியிலிருந்து, 2 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் 12 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்படும், மருத்துவப்படியும் கூட்டி தரப்படும். என பலத்த வரவேற்புகளிடையே அறிவிப்பு செய்தார்.
வறுமையில் வாடும் பல முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இதன் மூலம் ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது.
பல அமைச்சர்களும், பல கட்சி உறுப்பினர்களும் இக்கோரிக்கையை முதன்முதலாக உயர்த்த குரல் கொடுத்த மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA-வுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் கூறினர்.
இதற்கு ஆதரவாக பேசிய தனியரசு, மலேசிய பாண்டியன், முருகுமாறன் உள்ளிட்ட MLA-க்களுடன் M.தமிமுன் அன்சாரி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இதன் மூலம் நேர்மையான பல MLA-க்கள் மாதாந்திர நெருக்கடிகளிலிருந்து மீள வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் கார் பராமரிப்பு, ஓட்டுனர் மற்றும் உதவியாளர் சம்பளம், தொகுதி அலுவலக செலவுகள் இதன் மூலம் ஈடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சங்கத்தின் தலைவர் பேராவுரணி சிங்காரம் தலைமையில் அதன் நிர்வாகிகள் ஜானகிராமன், தங்கராசு ஆகியோர் தங்கள் கோரிக்கைக்கு குரல் கொடுத்த மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
தகவல்;
மஜக சட்டமன்றவாளக செய்தியாளர்கள் குழு,
சென்னை.
19.07.17