காஷ்மீர் பெண்களை கற்ப்பழிப்பதா தேச பக்தி? திருச்சியை உலுக்கிய மஜகவின் ஆர்ப்பாட்டம்!

image

திருச்சி மாநகரில் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து உக்கிரத்தோடு  மஜக வின் சார்பில் கடந்த 24.07.2016 அன்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

துணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி தலைமையில், மாநில செயலாளர் ராசுதீன் முன்னிலையில், மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்தலில் மாலை 4 மணியளவில் மஜவினரும்,பொது மக்களும் திரண்டனர்.

மஜகவின் அழைப்பினை ஏற்று திரண்ட மக்கள் திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

#காஷ்மீர்_மக்களின்_போராட்டம்__தேசிய_இனத்தின்_போராட்டம்

#காஷ்மீர்_பெண்களை_கற்ப்பழிப்பதற்க்கு_பெயர்_தேச_பக்தியா?

#காஷ்மீர்_குழந்தைகளை தாக்குவதற்கு_அரச_படைகளுக்கு_அதிகாரமா?

மத்திய அரசே…காஷ்மீரில் ராணுவத்தில் அத்துமீறல்களை தடுத்து நிறுத்து

போன்ற பதாகைகளுடன்,நெருப்பை சுடும் முழக்கங்களும்,வேட்டையாட புறப்புடும் புலிகளின் உறுமலுடன் மஜகவினர் திருச்சி ரயில் நிலையத்தை சுற்றி வளைத்தனர்.

மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய படியே காவல்துறை வேண்டுகோளை ஏற்று அனைவரும் கைதாகினர்.

ஈழத் தமிழர்களும்,காஷ்மீரிகளும்,நாகலாந்து மக்களும்,மணிப்பூர் மக்களும் மனிதநேயத்துடன் காப்பாற்ற படவேண்டும்.
என்பதே மஜக வின் நோக்கம்.#அதற்காக_எப்போதும்_எழும்_நமது_முழக்கம்

தகவல்;

மஜக ஊடகப் பிரிவு (திருச்சி)