You are here

மாணவர் அமைப்பினர் கூட்டாக சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு…!

image

image

image

சென்னை.செப்.03., இன்று சென்னை பத்திக்கையாளர் மன்றத்தில் மாணவர் இந்தியா அமைப்புடன் சேர்ந்து பல அமைப்புகள் இன்று மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து எடுத்த முடிவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பை செய்து மாணவி அனிதாவின் கனவான “நீட்”டில்லா தமிழகம் உருவாக ஆதரவழிப்போம் என்றும், அனிதா ஆக்ட் என்ற சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.

இச்சந்திப்பில் மாணவர் இந்தியா சார்பில் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணை செயலாளர் பசீர் மற்றும் ஊடக பிரிவு கார்த்திக், கோட்ஷோ (Cotso) அமைப்பு, டாக்டர்.எழிலன் ஆகியோர் இருந்தனர்.

தகவல்:
மாணவர் இந்தியா ஊடகபிரிவு
சென்னை.
03.09.17

Top