You are here

திருச்சி மாவட்டம் மாணவர் இந்தியா சார்பில் மாணவி அனிதாவுக்கு ஆதரவா மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கூட்டம்..

image

image

image

திருச்சி.செப்.03., மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் திருச்சி 49-வது வார்டு காயிதேமில்லத் தொடக்க பள்ளி அருகில் நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரியும், நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து உயிர் நீத்த மாணவி அனிதாவுக்கு ஆதரவாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டம் மாணவர் இந்தியா திருச்சி மாவட்ட செயலாளர் புரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, மாணவர் இந்தியா மாவட்ட அமைப்பாளர் மைதீன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் மற்றும் விடுதலை சிறுத்தை மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், ஜம்.ஜம் பஷீர், ஷேக்தாவூத், இளைஞர் அணி சதாம், தகவல் தொழில்நுட்ப அணி சேட் ஆகியோர்,

கிளை நிர்வாகிகள் பக்கீர் மொய்தீன், அப்துல் காதர், அபுபக்கர் சித்திக்,
அமீர், ரியாஸ், ரஹ்மத்துல்லா மற்றும் மாணவர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தகவல்:

மாணவர் இந்தியா ஊடக பிரிவு
திருச்சி மாநகர் மாவட்டம்.
03.09.2017.

Top