தமிழக முதல்வருடன் M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு!

image

#தமிழக_முதல்வருடன்

M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு!

(நீட்தேர்வு, கதிராமங்கலம், கம்பம் வழக்கு, சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக)

இன்று (18.7.17) மதியம் 3 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் முதல்வர் அறையில் சந்தித்தனர்.

NEET தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுக்க வேண்டிய முன் முயற்சிகள் குறித்து மூவரும் கருத்து தெரிவித்து, அது தொடர்பாக மாணவர்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். உடனே அதற்கு நாளையே சந்திக்கலாம் என ஒப்புக் கொண்டார்.

பிறகு MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்வது குறித்து மீண்டும் நினைவூட்டினர்.
அது குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என முதல்வர் பதிலளித்து நம்பிக்கையூட்டினார்.

கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குள் வாபஸ் பெற வேண்டும் என்றதற்கு, அங்கு நிலைமை சுமூகமாகி வருகிறது. நிலைமை சீரானதும் வழக்குகள் வாபஸ் பெற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார்.

பிறகு, தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ரமளான் மாதத்தில் தொழுகை நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பொய் வழக்கில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டது குறித்தும், நிஜாம் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. அது குறித்து விசாரிப்பதாக முதல்வர் கூறினார்.

பிறகு பேரறிவாளன் பரோல், திண்டுக்கல் மீரான் மைதின், கோவை அபுதாஹிர் போன்ற நோயாளி சிறைவாசிகளின் விடுதலை குறித்தும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடமும் நினைவூட்டப்பட்டது.

இன்று மதியம் முதல்வரை சந்தித்தப் பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் மூன்று MLA-க்களையும் சந்தித்து நடைபெறும் முன் முயற்சிகள் குறித்து நன்றி கூறினார்.

தகவல்;
சட்டமன்ற செய்தியாளர்கள் குழு,
#MJK_IT_WING
சென்னை.
18.07.17