நவீன இந்தியாவிற்கு வழிகட்டியவர்கள் கிருஸ்தவர்கள்..! அருமனை கிருஸ்துமஸ் விழாவில் மஜக பொதுச்செயலாளர் பேச்சு..!!

image

image

image

குமரி. டிச.24., கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் 20-வது கிறிஸ்துமஸ் விழா நேற்று சிறப்போடு நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அம்மா அவர்கள், கேரளா முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் என பிரபலங்கள் பங்கேற்று வரும் கிருஸ்துமஸ் சமூக நல்லிணக்க விழா, நாடு தழுவிய அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

இவ்விழாவிற்கு மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் எடப்படியார் உள்ளிட்டோருக்கு இவ்வருடம் அழைப்பு விடுத்திருந்தனர்,  பணிச்சுமை காரணமாக அவர்களால் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில், இவ்வருட சமூக நல்லிணக்க கிருஸ்துமஸ் விழாவிற்கு திரு.TTV. தினகரன், மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஸ்சுமந்திரன் MP, காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் MLA மற்றும் விஜயதரணி MLA ஆகியோர் பங்கேற்றனர்.

இந்து, முஸ்லிம், கிருஸ்தவ சமூகங்களை சார்ந்த குமரி மாவட்ட பிரமுகர்களும், மீனவ சமுதாய பிரதிநிதிகளும் பல்வேறு கிருஸ்தவ பிரிவுகளை சார்ந்த தலைவர்களும் பங்கேற்று, கிருஸ்துமஸ் விழாவை சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இதில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது…

பல்வேறு தரப்பட்ட சமூகங்களை இணைத்து வகுப்புவாதத்தை புறக்கணித்து, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்ககூடிய கிருஸ்தவ சொந்தங்களுக்கு எமது கிருஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.

இந்த நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு கிருஸ்தவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. நாடெங்கிலும் உள்ள ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகளை நடத்தி அறிவொளியை  பரப்பிவருக்கிறார்கள். சங்பரிவரங்களை சேர்ந்த பலரும் கிறித்தவ பள்ளிகளில் படித்தவர்கள் என்பதை மறந்துவிட கூடாது.

அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள் என அவர்களாற்றி வரும் தொண்டுகள் அபரிமிதமானது.

அண்ணை தெரசா ஆற்றிய மனிதநேய பணிகள் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட கூடியவை. ஐரோப்பாவில் இருந்து வருகைதந்து, இந்திய மக்களை நேசித்து, கொல்கத்தாவில் தொழுநோயாளிகளுக்காக ஆசிரமத்தை அமைத்த அவரது பணி உன்னதமானது.

அந்த ஆசிரமத்தை வழிநடத்த கொலக்கத்த வீதிகளில் இறங்கி நன்கொடை சேகரித்தார், அப்போது ஒரு செல்வந்தர் அண்ணை தெரசாவின் முகத்தில் எச்சிலை துப்பினார். அண்ணை கோபப்படவில்லை. நீங்கள் துப்பிய எச்சில் எனக்கானது. என் பிள்ளைகளுக்காக நான் கேட்டுவந்த நன்கொடையை தாருங்கள் என்று கேட்டதும் அந்த செல்வந்தர் தலைகுனிந்துவிட்டார்.

தமிழ் மீது கொண்ட காதலால் தான் “கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி”  என்பவர் தன்னை வீரமாமுனிவராக பெயர் மாற்றிக்கொண்டார்.

தமிழ் மொழி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் அச்சுக் கலையை தரங்கம்பாடியில் துவங்கியவர் “சீகன் பால்கு” அவர்கள்.

கல்வி, மொழி, பண்பாடு, அறிவியல், மருத்துவம் என பல துறைகளிலும் கிருஸ்தவர்கள் தொண்டாற்றி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் இருந்து ஏழைகளுக்கு பணியாற்ற வந்த பாதிரியார் “கிரஹாம் ஸ்டைன்ஸ்” அவர்களது இரண்டு பச்சிளம் பிள்ளைகளையும் மதவெறியர்கள் ஒரிசாவில் தீ வைத்து எரித்தார்கள்.

சில மாதங்கள் கழித்து அவருடைய மனைவியிடம் இத்துயர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பினர். அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்று கணவனையும், பிள்ளைகளையும் பறிகொடுத்த அந்த பெண்மணி கருணைபொங்க கூறினார். மன்னிப்பையும் வழங்கினார், இதுதான் கிருஸ்தவத்தின் சிறப்பு.

நபி இப்ராஹிம் (அலைஹி…) என்றும் ஆப்ரஹாம் என்றும் சொல்லப்படுபவரின் பேரப்பிள்ளைகள் தான் முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும். நாங்கள் இறைத்துத்தார் என்று நம்பக்கூடிய ஈஸா (அலைஹி..) அவர்களை நீங்கள் ஜீசஸ் என்று அழைக்கிறீர்கள். அவரும், அவரது வழி வந்த முகம்மது நபி (ஸல்லல்லாஹு…)  மனிதநேயத்தை தான் போதித்தார்கள், கவுதம புத்தரும், விவேகானந்தரும் அதை தான் வலியுறுத்தினர்.

இந்துக்களையும், முஸ்லிம்களையும், கிருஸ்தவர்களையும் பிரிக்க நினைத்து அதிகாரத்தை நிரந்தரமாக பிரிக்க சிலர் நினைக்கிறார்கள். கால சக்கரம் சுழலும், மதவாதம் தூக்கி எறியப்படும். இது அன்பு, சகிப்புத்தன்மை, கருணையை வெளிப்படுகித்தும் முயற்சி. எனவே தான் எல்லா சமூக தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வந்துள்ளனர்.

இதனை புரிந்து கொண்டு எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும். நமது நாட்டின் பன்மை கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். அதற்க்கு இந்த கிருஸ்துமஸ் நல்லிணக்க விழா துணைபுரியட்டும் என்று கூறி, மீண்டும் எனது வாழ்த்துக்களை கூறி அமற்கிறேன்.

இவ்வாறு மஜக பொதுச்செயலாளர் பேசினார்.

மஜக பொதுச்செயலாளர் உரையை TTV. தினகரன் கூர்ந்து கவனித்து, அவர் பேசி அமர்ந்ததும், கைகொடுத்து பாராட்டினார்.

இறுதியாக TTV பேசும்போது பாஜகவை வெளுத்து வாங்கினார். தமிமுன் அன்சாரியை தனது நண்பர் என்றும், சகோதரர் என்றும் குறிப்பிட்டு பேசினார்.

முன்னதாக மார்த்தாண்டம் முதல் பிரம்மாண்ட ஊர்வலம் நடக்கப்பெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியை பாதிரியார் “ஸ்டீபன்” தலைமையிலான குழுவினர் சிறப்பாக ஒருங்கிணைத்தது பாராட்டத்தக்கது.

இந்நிகழ்வில் பொதுச்செயலாளருடன்,  மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.M.ஹாரிஸ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் A.ஜாகிர் உசேன்.  தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் சாகுல் மற்றும் குமரி மாவட்ட மஜக செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
24.12.17