இன்றைய நாகரீக வளர்ச்சியில் …
எல்லாவற்றையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தோன்றினாலும்..
மனிதர்களின் வேலைகளை இலகுவாக்க எண்ணற்ற உபகரணங்கள் வந்தாலும்..
நாம் உண்ணும் உணவு பொருளை விளைவிக்க விவசாயிகளால் மட்டுமே முடியும்..
இதில் லாபம் பெரிதாக இல்லையென்றாலும் மண் வளத்தை பக்குவப்படுத்தி மக்கள் நலமுடன் வாழ
தன் இரத்தத்தை வேர்வையாக சிந்தி ஊழியம் செய்யும் ஒப்பற்ற ஜீவன்களான விவசாயிகள் தினத்தை நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்கிறது மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாயிகள் அணி பிரிவு.!
தோழர்களே… ”இந்தியா ஒரு விவசாய நாடு’’ என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை மட்டுமல்ல விவசாய பெருமக்களையும் வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டு உள்ளன.!
டெல்லியில் தொடர்ச்சியான விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் போராடிய விவசாயிகள் மீது எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து போராட்டத்தை முடக்கிய மோடி தலைமையிலான பாஜக அரசு!
அம்பானி அதானிக்கு சேவகம் செய்வதில் தனதுவிசுவாசத்தை காட்டுகிறது.!
நினைத்தாலே வேதனை மிஞ்சுகிறது.
உண்ண உணவு கொடுக்கும்
விவசாயி உணவில்லாமல்
எலிக்கறி தின்று மரணிக்கும் அவலம்,
இன்றும் தொடர்கிறது.
பொதுவாக விவசாயத்திற்கு
அரசாங்கத்தின் ஆதரவு போதிய அளவில் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மற்றொரு பக்கம், ‘விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’ என்ற ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கூற்றை உண்மையாக்கும் வகையில் வருங்கால தலைமுறையின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பி வருவது, ஆரோக்கியமான மாற்றம்.
அரசாங்கம் விவசாயத்தை நோக்கி முன்வரும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாணியமாக விவசாய உபகரணங்கள் வழங்கி ஊக்குவிக்கபட வேண்டும் என இந்த நல்ல நாளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் விவசாய அணி பிரிவு அரசிற்கு கோரிக்கையாக வைக்கிறது.
இனி வரும் காலங்களில் விவசாயம் என்பது பெருமதிப்புமிக்கதாக
மாறவும், விவசாயத்தையும்,
அதை நம்பியுள்ள விவசாயிகளுக்கும் இந்த சிறப்பு மிக்க நாளில் மேன்மை பெற அனைவரும் அவர்களுக்கு
பிரார்த்தனையோடு வாழ்த்துகளை பகிர்வோம்.!
இனி வரும் காலங்களில் விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றுவோம்.!
வாழ்த்துகளுடன்,
#நாகை_முபாரக்,
#மாநில_விவசாய_அணி_செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
23.12.17