வேலூர்.செப்.07.,வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விரைவில் கிளைகளை கட்டமைத்து மாவட்ட பொதுக்குழு நடத்துவது எனவும் மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடைபெற்று வரும் இனபடுகொலையை கண்டித்து மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 11.09.2017 திங்கட்கிழமை நடத்துவது எனவும், அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், மருத்துவ மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், மாணவர் இந்தியா சார்பாக அடுத்த ஒரிரு நாட்களில் போரட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன், ரபிக் ரப்பானி (மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 07.09.17
Author: admin
நீட் தேர்வுக்கு எதிராக 9ஆம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம்! மாணவர் இந்தியா பங்கேற்பு!
நீட் தேர்வுக்கு எதிராக,ஜனநாயக சக்திகள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் மாணவர் இந்தியா பங்கேற்று வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இவ்விஷயத்தில் தமிழக மக்களை தட்டி எழுப்ப வேண்டும் என்பதில் மாணவர் இந்தியா உறுதியாக இருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் 09.09.2017 அன்று அதிமுக (அம்மா) அணியின் மாணவர் பிரிவு நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாணவர் இந்தியா பங்கேற்கும் என்பததை தெரிவித்துக் கொள்கிறேன். இவண், முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா
மஜகவினர் சென்னை ஆலந்தூரில் ரயில் நிலையம் முற்றுகை…!
சென்னை.செப்.07., மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி வடக்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக நீட் தேர்வை எதிர்த்தும், சகோதரி அனிதா படுகொலையை கண்டித்தும் நேற்று (06.09.17) ஆலந்தூர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் தலைமை தாங்கினார். தமிழக உரிமைகளுக்கும் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி #அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய பா.ஜ.க அரசையும் மாநில பினாமி பா.ஜ.க அரசையும் கண்டித்தும் மஜக மாநில செயலாளர் N.A.தைமிய்யா கண்டன உரையாற்றினார். மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர், மாவட்ட பொருளாளர் யாகூப், மாவட்டத் துணை செயலாளர் ஆலந்தூர் சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மெய்தீன், ஆலந்தூர் நகர செயலாளர் பாரூக் மரைக்காயர் உட்பட மாவட்டம், கிளை மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் என மனிதநேய சொந்தங்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #காஞ்சி_வடக்கு_மாவட்டம் 06.09.17
சிவகங்கையில் மஜக சார்பில் மதுக்கடை முற்றுகைப் போராட்டம்..!
சிவகங்கை.செப்.06., இன்று இளையான்குடி சாலையூர் நகரின் புரபஸர் காலனி, இஸ்லாமிய கல்லூரி, கோவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுக்கடையை திறக்க முயற்சித்தனர். அதனையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் உமர் கத்தாப், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலைவகிக்க, மாநில துணை செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமையில் மதுபானக்கடை முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டாட்சியர் அவர்களிடம் மதுபானக்கடை இந்த குடியிருப்பு பகுதியில் திறக்கக்கூடாது எனவும், மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் மக்களை திரட்டி கடைக்கு பூட்டுப்போட்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அதிவிரைவு காவலர்களும், தாலுகா காவலர்களுடன் இணைந்து, வட்டாட்சியர் அவர்கள் அரசின் திட்டம் மதுபானக்கடையை திறப்பது எனவும், எதிர்ப்பவர்களை அப்புறப்படுத்துமாறும் கூறியவுடன் மக்கள் வெகுன்டெழுந்து கடையை மூடமுயற்சித்தனர். பிறகு காவலர்கள் அரன் அமைத்து கடையை மூடிச்சென்றனர். இளையான்குடி நகரின் அந்த பகுதி மக்கள் உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு மதுக்கடையை அடைக்க உதவினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 06.09.17
ரோஹிங்ய முஸ்லிம்கள் இனப்படுகொலை..! மஜக கடும் கண்டனம்..!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்ந்து இன அழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு வாராத்திற்கு மேலாக அங்கு மீண்டும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியர்கள் நடத்தி வரும் கொடூர படுகொலைகள் உலக மக்களை பதற வைக்கின்றன. விடுதலை போராளியாக பார்க்கப்பட்ட மியான்மர் தலைவர் ஆங்சாங் சூகி இவ்விஷயத்தில் ஒரு சுயநலவாதியாகவே நடந்துக் கொள்கிறார். ராணுவ அதிகாரிகளும் ,சில பௌத்த துறவிகளும் முன்னின்று நடத்தும் அட்டூழியங்களை உலகம் இனியும் வேடிக்கைப் பார்க்ககூடாது. பார்க்கவே முடியாத கொடூரமான காட்சிகள் உலக தொலைக்காட்சிகளிலும் , வலை தளங்களிலும் காட்டப்படுகின்றன. இவ்விஷயத்தில் ஐ.நா. கையாலாகாத பொம்மை சபையாகவே இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை . இந்திய அரசு இவ்விஷயத்தில் மியான்மர் தூதரை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் உயிருக்கு அஞ்சி இந்தியாவுக்கு ஓடி வரும் ரோஹிங்ய மக்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கி அரவணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் . மனிதநேய ஜனநாயக கட்சி இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி , ஆர்ப்பாட்டங்களையும், கருத்தியில் பரப்புரைகளையும் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவண். M.தமிமுன்அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி