நீட் தேர்வுக்கு எதிராக 9ஆம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம்! மாணவர் இந்தியா பங்கேற்பு!

image

நீட் தேர்வுக்கு எதிராக,ஜனநாயக சக்திகள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் மாணவர் இந்தியா பங்கேற்று வருகிறது.

அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இவ்விஷயத்தில் தமிழக மக்களை தட்டி எழுப்ப வேண்டும் என்பதில் மாணவர் இந்தியா உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் எதிர்வரும் 09.09.2017 அன்று அதிமுக (அம்மா) அணியின் மாணவர் பிரிவு நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாணவர் இந்தியா பங்கேற்கும் என்பததை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்,
முஹம்மது அஸாருதீன்,
மாநிலச் செயலாளர்,
மாணவர் இந்தியா