வேலூர்.செப்.07.,வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விரைவில் கிளைகளை கட்டமைத்து மாவட்ட பொதுக்குழு நடத்துவது எனவும் மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடைபெற்று வரும் இனபடுகொலையை கண்டித்து மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 11.09.2017 திங்கட்கிழமை நடத்துவது எனவும், அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், மருத்துவ மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், மாணவர் இந்தியா சார்பாக அடுத்த ஒரிரு நாட்களில் போரட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன், ரபிக் ரப்பானி (மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
07.09.17