மார்ச்.02.,
கடந்த பிப்-28 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மஜக பொதுக் குழுவில் நடைபெற்ற விருந்தோம்பல் பொதுக் குழுவுக்கு வந்த நிர்வாகிகளை வயிறார வாழ்த்த வைத்தது.
புருணே மண்டல மஜக சார்பில் செய்யப்பட்ட காலை, மதிய விருந்துகள் எல்லோரையுமே அசத்தியது.
காலையிலேயே சுடசுட தேனீர் வழங்கப்பட்டுக் கொண்டேயிருந்தது.
காலை வெண் பொங்கல், வடை, இட்லி என உயர்ரக சைவ உணவுகள் பரிமாறப்பட்டது.
மதியம் நீடுரில் செய்யப்பட்ட ‘டெல்டா மட்டன் பிரியாணி’ unlimited என பரிமாறப்பட்டது.
ஃபிர்னி, சிக்கன் 65, கத்தரிக்காய் மற்றும் வெங்காய பச்சடி, மினரல் போத்தல் என திருமண விருந்து போல இருந்ததை எல்லோருமே மெச்சினர்.
மாநில செயலாளர்கள் நாகை, முபாரக், வல்லம் அகமது கபீர், நெய்வேலி இப்ராகிம், ஆகியோருடன் மாநில துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஜாவித், புதுக்கோட்டை துரை முகம்மது, கோட்டை ஹாரிஸ், பேரா. அப்துல் சலாம், ஓசூர் நவ்சாத், ஆகியோரும் அனைவரையும் உபசரித்த வண்ணமிருந்தனர்.
MJVS மாநிலச் செயலாளர் பிஸ்மில்லாகான், MJTS மாநில பொருளாளர் மதுரை கனி, MJTS மாநில துணைச் செயலாளர்கள் மாத்தூர் இப்ராகிம், கண்ணன் உள்ளிட்ட மாநில அணி பொறுப்பாளர்களும், மயிலாடுதுறை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் விருந்தோம்பல் பணிகளில் ஈடுபட்டனர்.
கூடவே பத்திரிக்கையாளர்கள், காவலர்களுக்கும், அங்கிருந்த ஊழியர்களுக்கும் அதே விருந்து வழங்கப்பட்டது.
விருந்தும், விருந்தோம்பலும் டெல்டாவின் உன்னத கலாச்சாரம் என்பதை பலரும் பாராட்டி விட்டு சென்றனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
28.02.2024.