கொடியேற்றத்துடன் தொடங்கிய மஜக பொதுக்குழு குத்துச்சண்டை வீரர்களும் குட்டிக்கரணம் அடிப்பவர்களும் ஒன்றா? தலைவர் மு.தமிமுன் அன்சாரி_பேச்சு…

மார்ச்.01.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு பிப்ரவரி 28 அன்று காலை மயிலாடுதுறையில் AJK மண்டபத்தில் நடைபெற்றது.

முதல் நாள் இரவு 10 மணி முதலே தூர மாவட்ட நிர்வாகிகளின் வருகை தொடங்கியது.

காலை 4 மணி முதல் அதிகமானோர் வரத் தொடங்கினர்.

அவர்களை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்று அழைத்து செல்ல மயிலாடுதுறை (மேற்கு) மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மண்டபத்தின் வளாகம் பரந்து விரிந்து பெரிதாக இருந்ததால் நிர்வாகிகள் ஒன்று கூடி எடுத்து வந்த வாகனங்களை நிறுத்த இடம் வசதியாக இருந்தது.

அந்த வளாகத்தில் பள்ளியும், தர்ஹாவும் இருந்தால் ஓய்வெடுக்கவும், தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வசதியாய் இருந்தது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பொதுக்குழு அரங்கின் நுழைவாயிலுக்கு மறைந்த முன்னாள் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மாயவரம். மாலிக் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்கே தூர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சாப்பிடும் வகையில் காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உபசரிக்கப்பட்டது.

மதியம் சுவையான டெல்டா பிரியாணியும் தயாராகி இருந்தது.

இருவேளை உணவையும் புருணே மண்டல மஜக-வினர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 8.30 மணி முதலே வருகைப் பதிவுகள் தொடங்கியது.

பொருளாளர் J.S.ரிஃபாயி, இணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோர் அவற்றை ஒழுங்குப்படுத்தி கண்காணித்தனர்.

மொத்தம் 53 நிர்வாக மாவட்டங்கள் என்பதால் 10 மாவட்டங்களுக்கு ஒரு கெளண்டர் அமைக்கப்பட்டு, அதில் அழைப்பிதழ்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு உள்ளே நுழையும் பேட்ஜ் வழங்கப்பட்டது.

https://bit.ly/49w7UZu

மாணவர் இந்தியா, இளைஞர் அணி, மனிதநேய வழக்கறிஞர் பாசறை ஆகிய துணை அமைப்புகளின் நிர்வாகிகள் இப்பணிகளை மேற்கொண்டனர்.

காலை 10 மணிக்கு தலைவர் அவர்களை வரவேற்று வாகன ஊர்வலங்கள் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை நகரம் முழுக்க ஃப்ளக்ஸ் தட்டிகள், மஜக கொடிகள் என நகரமே மஜக கோலம் பூண்டிருந்தது.

அந்த வரவேற்பு ஊர்வலத்தை மாநிலச் செயலாளர்கள் நெய்வேலி. இப்ராகிம், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், கோவை. ஜாபர், மாநில துணைச் செயலாளர்கள் பேரா. அப்துல் சலாம், அசாருதீன் ஆகியோர் வழிநடத்தினர்.

இளைஞர் அணி செயலாளர் புதுமடம் பைசல், பொருளாளர் கோவை பைசல், துணைச் செயலாளர்கள் திருப்பூர் ரமேஷ், நெல்லை பிலால் ஆகியோர் கொண்ட குழு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது தலைமையில் மாநில செயலாளர் வழக்கறிஞர் முஸரப், மண்டல செயலாளர் நிஷாத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிதம்பரம் பைசல், திருப்பூர் அஸாருதீன் மற்றும் மனிதநேய வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் அமீன் மற்றும் மாநில துணைச்செயலாளர் ஸ்வாதீஷ், மாணவர் இந்தியா சிதம்பரம் பைசல் மற்றும், பண்டாரவடை அப்துல்லா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பொதுக்குழு நிர்வாகிகள் வருகை பதிவு பணியினை மிகச் சிறப்பாக கையாண்டனர்.

மயிலாடுதுறை மேற்கு மாவட்ட செயலாளர் வானதி ராஜபுரம் சலீம், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக்கூர் ஷாஜகான் ஆகியோர் தலைவருக்கு நுழைவாயிலில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பிறகு கட்சியின் முழக்கங்களுக்கிடையே தலைவர் அவர்கள் கொடியேற்றினார்.

பிறகு மருத்துவ சேவை அணி சார்பில் அப்பகுதியை சேர்ந்த மஜக-வின் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

அவற்றை பார்வையிட்டு மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான் கான் அவர்களை தலைவர் பாராட்டினார்.

வளாகம் முழுதும் மாநிலச் செயலாளர்கள் வல்லம். அகமது கபீர் தலைமையில் மாநில துணைச் செயலாளர்கள் ஜாவீத், ஹாரிஸ்,பேரா. அப்துல் சலாம் , சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், MJTS மாநில பொருளாளர் மதுரை கனி, துணைச் செயலாளர்கள் மாத்தூர் இப்ராகிம், கண்ணன் ஆகியோர் கொண்ட குழு எல்லாப் பணிகளையும் ஒருங்கிணைத்த வண்ணம் இருந்தனர்.

தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளர் தாரிக், மாநில துணைச் செயலாளர் நாகை. ரெக்ஸ் சுல்தான் ஆகியோர் கொண்ட குழு தங்கள் படப்பிடிப்பு பணிகளை செய்துக் கொண்டிருந்தனர்.

பிறகு பொதுக்குழு தொடங்கியது.

நிகழ்ச்சியை தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் வல்லம். ரியாஸ் தொகுத்து வழங்கினார்.

வரவேற்புரையை துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி ‘opening Bats Man’ போல அசத்தலாக பேசி அனைவரையும் வரவேற்றார்.

நோக்கவுரையை பொருளாளர் J.S.ரிஃபாயி அவர்கள் விளக்கி பேசியதுடன், சில அதிரடி கருத்துகளை சிலேடையாக கூற பொதுக்குழு உற்சாகமானது.

பிறகு தலைவர் அவர்கள் நடப்பு அரசியல் சூழல் குறித்த தீர்மானத்தை விளக்கி அதற்கு ஒப்புதல் வழங்க அனுமதி கேட்டார்.

பொதுக்குழு அதற்கு சம்மதித்தது.

பிறகு பொதுச் செயலாளர் மெளலா நாசர் அவர்கள் முக்கிய ஐந்து தீர்மானங்களை ‘ஆதரிக்கிறோம்’ என்ற பலத்த முழக்கங்களுக்கிடையே வாசித்தார்.

அடுத்து இணைப் பொதுச்செயலாளர் செய்யது முகம்மது ஃபாரூக் அவர்கள் 10 தீர்மானங்களை நிறுத்தி – நிதானமாக வாசித்தார்.

பிறகு தலைவர் அவர்கள் எழுச்சி ஆராவாரத்திற்கிடையே தனது உரையை தொடங்கினார்.

‘அரசியல் மேடையில் குத்துச்சண்டை போடுபவர்களை மாவீரர்கள் என சொல்லலாம்.

குட்டிக்கரணம் போடுபவர்களை மாவீரர்கள் என்றால் அதை மாமன்றம் ஏற்குமா?

என்று ‘பொடி’ வைத்துப் பேச கூட்டம் ஆராவரித்தது.

இளைஞர்கள் நிறைந்த கட்சியாக மஜக உருவெடுத்திருப்பதை இப்பொதுக் குழு காட்டுகிறது என்றார்.

நிர்வாகிகளை தட்டியெழுப்பிய அவரது உரை 40 நிமிடங்கள் நெருப்பாக இருந்தது.

பிறகு தலைவர் அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

அவர் அதை பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.

பிறகு துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் அனைவருக்கும் விலாவாரியாக நன்றி கூறினார்.

பொதுக் குழுவுக்கு வந்தவர்களுக்கு மஜக நாட்காட்டிகள், துண்டுகள், பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மஜக வேஷ்டிகள், கீ செயின்கள், மஜக தொப்பிகள் ஆகியனவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

நாம் கலைவது பிரிவதற்கல்ல : மீண்டும் திரள்வதற்கு என்ற துடிப்புடன் பொதுக்குமு நிறைவுற்றது.

தொடர்ந்து அங்கு பொதுக்குழு ஏற்பாட்டுக்குழு தலைவர் – துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர்கள் நெய்வேலி. இப்ராகிம், நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், மாநிலத் துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக் ஆகியோரின் பணிகளுக்கு தலைவரும், பிற தலைமை நிர்வாகிகளும் பாராட்டினர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
28.02.2024.