பெங்களூரு.டிச.10., இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் மே17 இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் " தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும் " என்ற தலைப்பில் அரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) கர்நாடக மாநிலம் பெங்களூர் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் கலந்து கொண்ட மஜக பெங்களூரு மாநகர் செயலாளர் KMJ. பாபு அவர்கள் தோழர். திருமுகன் காந்தி அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்தினார். இந்நிகழ்வில் மாநகர் பொருளாளர் J.சல்மான், துணை செயலாளர் A.அக்கீம் சேட், தகவல் தொழில்நுட்ப செயலாளர் தன்வீர், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அந்தோனி தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #MJK_KARNATAKA
Author: admin
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாகை மீனவர்களுடன்… தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!
நாகை. டிச.10., நாகை நம்பியார் நகரை சேர்ந்த 11மீனவர்களும், நாகை ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஒரு மீனவரும் குமரி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கி காணாமல் போய்விட்டனர். கடந்த டிசம்பர் 7ஆம் தேதி இதுகுறித்து தமிழக முதல்வரையும் , மீன்வளத்துறை அமைச்ச்ர் திரு,ஜெயக்குமாரையும் நேரில் சந்தித்து #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முறையிட்டார்கள். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி முதல் நாகையை சேர்ந்த 12 மீனவர்களையும் மீட்டுதர கோரி நம்பியார் நகரில் மீனவ மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை இன்று காலை 10 மணிக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மீனவ பெண்கள் MLA அவரகளின் கரத்தை பற்றிப்பிடித்து கதறி அழுதனர். அவர்களிடம் மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து பேசிவருவதாக MLA கூறினார். பிறகு, மீனவ பஞ்சாயத்தார்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார். நாளை கன்னியாகுமரிக்கு செல்வதாகவும் அங்கு பேரிடர் மீட்பு குழுவிடம் இது குறித்து பேசுவதாகவும் கூறினார். பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் MLA பேசும் போது, மத்திய மாநில அரசுகள் கடலில் 500 கி.மீ தூரத்திற்கு
கீழக்கரையில் மஜக தலைவர்கள் முகாம்..!
கீழக்கரை. டிச.09., இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு ,பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், வருகை தந்தார். தொண்டி, தேவிப்பட்டினம் , இராமநாதபுரம் சந்திப்புகளை முடித்துவிட்டு மாலை 6மணியளவில் கீழக்கரைக்கு வருகைதந்து முன்னாள் மாவட்ட செயலாளர் ஹபீப் அவர்கள் திருமணத்தில் பங்கேற்றார். அப்போது கீழக்கரையின் முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்து மஜகவின் பணிகள் குறித்தும், நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் உரையாடினார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணை பொதுசெயலாளர் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோரும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ. எம். ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் வருகை தந்தனர். இந்நிகழ்வுகளில் மஜக மாவட்ட நிர்வாகிகள் இலியாஸ், முகவை பீர், சோனப்பூர் அஜ்மல், செய்யாது இப்ராஹிம், அப்துல் கபூர், அப்துல் நசீர், செய்யது அபுதாஹிர், சுல்தான் சீனி அபுதாஹிர், ஹபீப் முகம்மது , தொண்டி முகம்மது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்
கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டியில் இணைந்தது மஜகவின் MJTS..!
கோவை.டிச.09., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தொழிற்சங்க மாவட்டசெயலாளர் ABS.அப்பாஸ், அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க கூட்டு கமிட்டியின் தலைவர் சுகுமாரன், அவர்களை சந்தித்து கூட்டு கமிட்டியில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் இணைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அக்கீம், தொழிற்சங்க பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டு கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 09.12.2017
விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பொருளாளர் பங்கேற்பு..!
திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு காவல்துறை இதுவரையிலும் எந்தவொரு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கே.பாலகிருஷ்ணன் Ex.MLA, அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை கோட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது., M.Com அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார். ஞானசேகரன் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கவும், மரணத்திற்கு காரணமான வங்கியின் மேலாளர் மற்றும் அடியாட்களான ராஜா, வெங்கடபதி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற இழப்பு இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டில் விவசாயிகள் பிரச்சினை , மீனவ சமுதாய பிரச்சனைகள் தீர்வு காணாமல் இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது என்றும் மஜக சார்பில் கண்டனத்தை பதிவுசெய்தார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை