ஜூலை:18., மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்டம் திருத்தங்கல் நகரம், சங்கரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நகர செயலாளர் நாகூர் கனி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேச ராஜா, நகர துணை செயலாளர் கருப்பையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை ABJ டைனமிக் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர் சலீம், டாக்டர் லட்சுமி பிரபா, ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் நகர பொருளாளர் முஹம்மது அசன், நன்றியுரை நிகழ்த்தினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 18.07.2021
Month:
விலைவாசி உயர்வை கண்டித்து பண்டாரவாடையில் மஜக ஆர்ப்பாட்டம்!
ஜூலை.18, இன்று பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாத ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி பாபநாசம் ஒன்றியம் சார்பில் பண்டாரவாடையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளர் முஹம்மது மஃரூப், ராஜகிரி ஊராட்சிமன்ற தலைவர் முபாரக் ஹூசைன், ராஜகிரி பண்டாரவாடை வணிகர் சங்க தலைவர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். இதில் முக கவசங்களுடன் ராஜகிரி - பண்டாரவாடை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மஜக ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மஜகவினர் மனு…!
வேலூர்.ஜூலை.18., குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலுவிஜயன் MLA., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.அனிஸ் அவர்கள் சந்தித்து மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து மனு அளித்தார். குடியாத்தம் நகரின் 8-வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், MBS நகர், பகுதிகளில் மக்களின் முக்கிய கோரிக்கையாக விடுப்பட்ட சாலை வசதிகள், கழிவு நீர் கால்வாய்கள் சீரமைப்பு புதிய மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு அவரிடம் அளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்டவர் அனைத்து கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இச்சந்திப்பில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் V.முபாரக் அஹ்மத், மஜக நகர துணை செயலாளர் A.S.கவுஸ் பாஷா, நகர மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா, ரஹ்மான், மற்றும் கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 18.07.2021
தாம்பரத்தில் MJTSன் கொடியேற்றிவைத்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி..!
சென்னை.ஜூலை.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான, மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை எதிரில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொழிற்சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து பெயர் பலகையை திறந்து வைத்தார். மேலும் தொழிற்சங்கத்தின் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்வின் போது பொதுச் செயலாளர் உடன் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான பல்லாவரம் ஷஃபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர், MJTS மாவட்ட செயலாளர் பி(F)ராங்ளின், அரங்கை முஸ்தபா, MJTS நகர செயலாளர் வீரமுத்த உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம் 14.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3584695948296821&id=700424783390633
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு தாம்பரம் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்பு..!
தாம்பரம்.ஜூலை.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை புரிந்த கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நிகழ்ச்சியை முடித்த பின்னர், தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள ஜும்மா பள்ளிக்கு சென்றார், அங்கு அவரை ஜமாத் தலைவர் நாகூர் கணி, செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் இக்பால் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் ஜமாத்தினர் உடன் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் சமகால நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினார். பொதுச் செயலாளர் உடன் மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி உடனிருந்தார். மேலும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக், மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர், அரங்கை முஸ்தபா ஆகியோர் நிகழ்வில் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம் 14.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3584454491654300&id=700424783390633