ஜூலை.10.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மாவட்டச்செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபீகர் அலி ஆகியோர் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மஜக மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்.
10/07/2020