ஜூலை.10,
கோரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தும் 9 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தி வைத்திருப்பதாக நாகை மாவட்டத்தை சார்ந்த விசுவநாதன் என்ற நபர் திருச்சி மஜக விமான நிலைய சேவைக்குழுவை தொடர்பு கொண்டு உதவி கோரினார்.
கடந்த பத்து நாளைக்கு முன் குவைத்தில் இருந்து திருச்சி வந்து ஏழுநாட்கள் தனிமைப்படுத்துதல் முடித்துக்கொண்டு நாகை சென்றதாகவும் அங்கே மூன்று நாட்கள் தனிமைப் படுத்துதல் என்று மயிலாடுதுறையில் ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளதாகவும் மூன்று நாட்கள் ஆகியும் எந்த பதிலும் இல்லாத சூழலில் 8 நபர்கள் உள்ளோம் என்று அவர் தந்த தகவலை திருச்சி மஜகவினர் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்து தேவையான உதவிகள் செய்யும்படி கேட்டு கொண்டனர்.
அதனடிப்படையில், மாவட்ட செயலாளர் மாலிக் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஹாஜாசலீம் ஆகியோர் தாசில்தாரை உள்ளிட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் 8 பேரையும் அவர்களது இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING #மயிலாடுதுறை
#நாகைவடக்குமாவட்டம்.