கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுர பரப்புரை.! முதமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்..!

சென்னை.மார்ச் 20,

இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுர பரப்புரையை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்.

சென்னை ஐஸ் அவுஸில் நடைப்பெற்ற நிகழ்வில், அங்கு நின்றிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், முக கவசங்களை விநியோகித்தும் பரப்புரையை தொடங்கி வைத்தார்.

அவரோடு துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, இளைஞர் அணிச் செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் தாரிக் ஆகியோரும் பங்கேற்றனர்.

பிறகு பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது…

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக பொருளாதாரமே சீர்குலைந்துள்ளது.

நமது நாடும் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பிரதமர் கூறிய அறிவுரைகள் முக்கியமானது. அது போல் தமிழக அரசும் முன் எச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. விழிப்புணர்வு கருதி அவற்றை நாம் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும்.

அதோடு மக்களும் இந்த விழிப்புணர்வு பணியில் தன்னார்வத்தோடு ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் முதலாவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று இப்பரப்புரையை தொடங்கி உள்ளோம்.

போப் ஆண்டவர் இருக்கும் வாட்டிகன் தேவாலயம், புனித மெக்கா, திருப்பதி கோயில் ஆகிய இடங்களில் மக்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து மதத் தலைவர்களும், அறிஞர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழக அரசு சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைப்பதோடு, டாஸ்மாக் மதுக்கடைகளையும் உடனே மூட வேண்டும் என மஜக-வின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகமெங்கும் மஜக-வினர் ஒரு வாரத்திற்கு இந்த துண்டு பிரசுர பரப்புரையை முன்னெடுப்பார்கள்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கடாபி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அப்துல் கையூம், தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜியா உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் இப்பரப்புரையில் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம்
20-03-2020