ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்று பிடிபட்டது. அக்கும்பலை பிடிக்க பெரிதும் உதவிய தொண்டியை சேர்ந்த இளைஞர்கள் மீதும் காவல்துறையினரால் பொய்வழக்கு புனையப்பட்டுள்ளது.
போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பலை பிடிக்க உதவிய இளைஞர்களை பாராட்டாமல், அவர்கள் மீது வழக்குத் தொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ஊர் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில் போதை பொருட்கள் விற்பனை செய்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவும் உதவுமாறு மஜக துணைப் பொதுச்செயலாளர் மண்டலம். ஜெய்னுல் ஆபீதின் அவர்கள், பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களிடம் வலியுறுத்தினார்.
அவர் இது குறித்து திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் MLA., அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில் இன்று காலை தொண்டிக்கு வருகை தந்த கருணாஸ் MLA., அவர்கள், ஐக்கிய ஜமாத் மற்றும் பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
பிறகு இது குறித்து மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
பிறகு ஜமாத்தார்கள் மற்றும் மஜக-வினர் இது குறித்து எடுக்கவிருக்கும் மேல் நடவடிக்கையை பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்பதாக கூறி அவரை வழியனுப்பி வைத்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#ராமநாதபுரம்_மாவட்டம்
10-07-2020