
தாம்பரம்.ஜூலை.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை புரிந்த கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நிகழ்ச்சியை முடித்த பின்னர்,
தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள ஜும்மா பள்ளிக்கு சென்றார், அங்கு அவரை ஜமாத் தலைவர் நாகூர் கணி, செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் இக்பால் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் ஜமாத்தினர் உடன் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் சமகால நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினார்.
பொதுச் செயலாளர் உடன் மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி உடனிருந்தார்.
மேலும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக், மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர், அரங்கை முஸ்தபா ஆகியோர் நிகழ்வில் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம்
14.07.2021
https://m.facebook.com/story.php?story_fbid=3584454491654300&id=700424783390633