ஜூலை 24., திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்தார். #பஹ்ரைன்_முன்னாள்_மண்டல செயலாளர் ஜான் மற்றும் அமீரக மண்டல செயலாளர் அசாலி அகமது ஆகியோரின் தந்தை அப்துல் சுக்கூர் அவர்களின் மறைவையொட்டி அவர்களின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். பிறகு #குவைத்_மண்டல_முன்னாள் துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு #மஜக நிர்வாகிகள் ஹபிபுல்லாஹ் மற்றும் ரஷீது ஆகியோரின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரிடம் நலன் விசாரித்தார். #நாச்சிக்குளம் கிளை நிர்வாகிகளிடம் கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அடுத்து #முத்துப்பேட்டை சென்று அங்கு நகர மஜக நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். பிறகு முபீன் ட்ராவல்ஸ் உரிமையாளர் #முகம்மது_மாலிக் அவர்களின் தந்தையார் மறைவுக்கு ஆறுதல் கூற அவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவ்வூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வருகை தந்து சால்வை அணிவித்து அவருக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் #கோட்டைப்பட்டினம் வந்து #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி மாநில செயலாளர் ஹாரிஸ் இல்லத்துக்கு சென்று அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறினார். அங்கு கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் கிளை நிர்வாகிகளையும் சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வுகளில்
Month:
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து மஜகவின் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்…!
1) கண்டிக்கின்றோம்.. கண்டிக்கின்றோம்.. மேகதாது மலையருகில்... அணை கட்ட முயற்சிக்கும்.... கர்நாடக அரசை... வன்மையாக கண்டிக்கிறோம். 2) காவிரி எங்கள் வாழ்வுரிமை.. அது தென்னகத்தின் பொதுவுடமை.. தடுக்காதே.. தடுக்காதே.. நதியுரிமையை தடுக்காதே! 3) ஒன்றிய அரசே.. ஒன்றிய அரசே.. துணை போகாதே.. துணை போகாதே.. கர்நாடக அரசுக்கு... துணை போகாதே.. துணை போகாதே.. 4) தென்னிந்தியாவின் பசியாற்றும்.. டெல்டாவின் வயல்வெளியை.. பாலைவனம் ஆக்காதே..! 5) காவிரியில் தாகம் தணிக்கும்.. தமிழக மக்களை வஞ்சிக்காதே..! 6) செயல்படுத்து.. செயல்படுத்து.. காவிரி மேலாண்மை ஆணையத்தை... செயல்படுத்து.. செயல்படுத்து.. 7) காப்போம்.. காப்போம்.. விவசாயிகளின் உரிமைகளை... பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! 8) காப்போம்.. காப்போம்.. காவிரி ஆற்றின் உரிமைகளை... பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! 9) காவிரி எங்கள் ரத்த ஓட்டம்.. அதை தடுத்து நிறுத்த விடமாட்டோம்! 10) போராட்டம்.. இது போராட்டம்.. மஜக முன்னெடுக்கும்... உரிமை காப்பு போராட்டம்!
ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும்… பக்ரீத் தொழுகைக்கு பிறகு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி..
ஜூலை 21, இன்று தியாக திருநாளான #பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைக்கு பிறகு, நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த இரண்டு ரமலான் பண்டிகைகளையும், ஒரு பக்ரீத் பண்டிகையையும் கொரணா காரணமாக கொண்டாட முடியவில்லை என்றும், இவ்வாண்டு தொற்று குறைந்துள்ளதால் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு மக்கள் தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்ததாகவும் கூறினார். பக்ரீத் வாழ்த்து அறிக்கைகள் விடுத்த தலைவர்கள், சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்து கூறிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். கொரணா தொற்று ஒழிந்து உலகம் மீண்டு வரவும், மக்கள் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதும் முக்கிய பிரார்த்தனையாக இருந்தது என்றும் கூறினார். மேலும், இத்திரு நாளையொட்டி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தார். எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டணை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் மற்றும் 60
மகிழ்ச்சி சகிப்புத்தன்மை ஒற்றுமை ஓங்க உறுதியேற்போம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தியாக திருநாள் வாழ்த்துச் செய்தி!
தியாகத்தை முன்னிறுத்தும் திருநாளான பக்ரீத் பண்டிகை உலகம் முழுக்க 'ஈதுல் அல்ஹா' என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. மனிதர்களை மனிதர்களே கொல்லும் நரபலியை தடுத்து; ஆடு, மாடு, ஒட்டகங்கள் என பல்கிப் பெருகும் கால்நடைகளை இறைவனுக்காக அறுத்துப் பலியிட்டு ; அதன் கறியை ஏழைகளுக்கு வினியோகிக்கும் முறையை, இறை தூதர்களில் ஒருவரான நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடங்கி வைத்தார்கள். தனது தவப்புதல்வர் இஸ்மாயில் (அலை) அவர்களை ; தான் கண்ட கனவின் படி ; இறைவனுக்காக அறுத்துப் பலியிட அவர் துணிந்த போது;இறைவனிடமிருந்து வந்த கட்டளை அதை தடுத்து நிறுத்தியது. அவரது இறைப்பற்றை சிலாகித்து ; அதற்கு பகரமாக ஒரு ஆட்டை பலியிடுமாறு அந்த இறை கட்டளை அறிவுறுத்தியது. அந்த நிகழ்வே தியாகத்திருநாளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் ஒரு மாபெரும் சமூக நல்லிணக்கமும் அடங்கியிருக்கிறது. இறைத்தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், யூதர்கள் என மூன்று பெரும் சமூகங்களால் போற்றப்படுபவர். அவர் மூலம் நிகழப் பெற்ற ஒரு வரலாற்று சம்பவத்தை, இறைவனின் இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தியாகத் திருநாளாக கொண்டாட அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதன்படியே உலகமெங்கும்
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து நெல்லையில் போராட்டம்.! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்.!!
நெல்லை.ஜூலை.19., சாமானியர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவை வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் அடைந்துள்ளது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பேட்டையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமை தாங்கினார், மாவட்ட துணைச் செயலாளர் இரா.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும் மஜக மாநில துணைசெயலாளர் A.R.சாகுல்ஹமீது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தென்மண்டல பொறுப்பாளர் நெல்லை செல்வம், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மஜக மாநில பொருளாளர் அவர்கள் ஒன்றிய அரசு தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி புரிவதாகவும். தினம் தினம் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு கட்டுபடுத்த தவறினால், நாடு மிகப்பெரிய மக்கள் எழுச்சி போராட்டங்களை