செப்.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஸ்கர், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன், அவர்கள் கலந்து கொண்டு இளைஞரணி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதில் மாவட்ட இளைஞரணி சார்பாக வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை வழங்குதல், மரக்ககன்று நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட நலப்பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மஜக மாவட்ட செயலாளர் திருப்பூர் ஹைதர்அலி, அவர்கள் இளைஞரணியின் பணிகள் குறித்து விவரித்து பேசினார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் அபுதாஹீர், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் அபு, மற்றும் மஜக மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_மாவட்டம் 29.09.2020
Month:
இது அநீதியான தீர்ப்பு! சிறுபான்மையினரின் உள்ளங்கள் எரிகிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இந்தியாவின் தொன்மை வாய்ந்த அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்த பாபர் மஸ்ஜித், 1992, டிசம்பர் 6 அன்று பயங்கவாத சக்திகளால் இடிக்கப்பட்டது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் சங்பரிவார் தலைவர்கள் இந்த அராஜக நிகழ்வுக்கு தலைமையேற்றனர். அவர்களின் திட்டமிடல், ஊக்குவிப்பு காரணமாக அந்த பாதகம் அரங்கேற்றப்பட்டது. சமீபத்தில் அயோத்தி நிலம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , பாபர் மஸ்ஜித் இடிப்பை குற்றம் என கூறியது. இது குறித்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள நிலையில்,தற்போது லக்னோ சிபிஐ நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேர்களையும் விடுதலை செய்துள்ளது. இது அதிர்ச்சியை தருகிறது. வேதனையளிக்கிறது. இந்த தீர்ப்பு அநீதியானது.சட்ட விரோதமானது. தீர்ப்பு வேறு, நீதி வேறு என்ற நிலை நம் நாட்டில் உருவாகி இருக்கிறது. இதை மனசாட்சி உள்ள யாராலும் ஏற்க முடியாது. பாபர் மஸ்ஜிதை இடிப்போம் என சபதமிட்டு அவர்கள் ரத யாத்திரையை நடத்தினார்கள். அதனால் வழியெங்கும் மதக்கலவரங்கள் ஏற்பட்டு பல நூறு அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 1996 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கி, பத்திரிக்கையாளர்களையும்
தேனி மாவட்ட மஜக சார்பில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கேரள எல்லை முற்றுகை போராட்டம்.!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்!!
செப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்டம் சார்பில் கேரளா இடுக்கி மாவட்டத்தில் தினசரி கூலி வேலைக்கு சென்றுவந்த தேனி மாவட்ட ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரியும், கட்டுமான தொழிலாளர்கள், பால் வியாபாரிகள் பணிக்கு செல்ல அனுமதி வழங்கக் கோரியும், தமிழக கூலி தொழிலாளர் களின் வறுமையை போக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும், ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக, கேரள, எல்லையான கம்பம் மெட்டு பகுதியில் முற்றுகை போராட்டம் மாவட்டச் செயலாளர் ரியாஸ், அவர்கள் தலைமையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது தேனி மாவட்டம் கம்பம் போடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைகளுக்கு தினசரி சுமார் மூன்றாயிரம் பேர் ஜீப், மற்றும் பேருந்துகளில், தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள், ஆனால் கொரோனா தாக்கத்தால் தற்போது ஏழு மாதங்களாக அவர்களுக்கு வேலை இல்லை அந்த குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு
விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! தபால் நிலையம் முற்றுகை போராட்டம்
விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! தபால் நிலையம் முற்றுகை போராட்டம் மத்திய அரசின் வேளாண் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 30.09.2020 புதன் அன்று மாலை 4.00மணிக்கு இரயில்வே பார்டர் ரோடு கோடம்பாக்கம் சென்னை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் கண்டன உரை NA.தைமியா துணை பொதுச்செயலாளர் J.சீனி முகம்மது மாநில செயலாளர் A.முஹம்மது அசாருதீன் மாநில இளைஞரணி செயலாளர் H.முஹம்மது கடாபி மாநில செயற்குழு உறுப்பினர் வாருங்கள். உழவர் உரிமை காக்க அணிதிரள்வோம்! இவண், #மனிதநேய_ஜனநாயக_கட்சி #தென்சென்னை_மேற்கு_மாவட்டம்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – தலைமை செயற்குழு உறுப்பினர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, A. முகம்மது இக்பால் சேட் த/பெ; அப்துல் லத்தீப் கும்பகோணம் அலைபேசி; 9344302443 நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 29-09-2020