மஜக திருப்பூர் மாவட்ட இளைஞரணி இணையவழி ஆலோசனை கூட்டம்.!


செப்.30.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஸ்கர், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன், அவர்கள் கலந்து கொண்டு இளைஞரணி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அதில் மாவட்ட இளைஞரணி சார்பாக வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை வழங்குதல், மரக்ககன்று நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட நலப்பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மஜக மாவட்ட செயலாளர் திருப்பூர் ஹைதர்அலி, அவர்கள் இளைஞரணியின் பணிகள் குறித்து விவரித்து பேசினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் அபுதாஹீர், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் அபு, மற்றும் மஜக மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_மாவட்டம்
29.09.2020