திருப்பனந்தாளில் முண்டாசு கட்டி மஜகவினர் போராட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!


செப்.30,
திருப்பனந்தாளில் ஒன்றிய மஜக சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் பச்சை முண்டாசுக்கட்டி கறுப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் மஜக மாநில செயலாளர் ராசுதீன் மற்றும் கொள்கைவிளக்க அணி துணைச்செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்ஷா தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர் இந்தியா உபைஸ் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் சேக் முகம்மது அப்துல்லாஹ், பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், து.செயலாளர்கள் இப்ராகிம் ஷா, ஆசாத் அலி, சையது இப்ராகிம், முகம்மது இப்ராகிம், முகம்மது பாரூக் உள்பட மஜக செயல்வீரர்கள் திரளான பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*