செப்.29.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்டம் சார்பில் கேரளா இடுக்கி மாவட்டத்தில் தினசரி கூலி வேலைக்கு சென்றுவந்த தேனி மாவட்ட ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரியும், கட்டுமான தொழிலாளர்கள், பால் வியாபாரிகள் பணிக்கு செல்ல அனுமதி வழங்கக் கோரியும், தமிழக கூலி தொழிலாளர் களின் வறுமையை போக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும், ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக, கேரள, எல்லையான கம்பம் மெட்டு பகுதியில் முற்றுகை போராட்டம் மாவட்டச் செயலாளர் ரியாஸ், அவர்கள் தலைமையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவர் பேசியதாவது தேனி மாவட்டம் கம்பம் போடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைகளுக்கு தினசரி சுமார் மூன்றாயிரம் பேர் ஜீப், மற்றும் பேருந்துகளில், தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள், ஆனால் கொரோனா தாக்கத்தால் தற்போது ஏழு மாதங்களாக அவர்களுக்கு வேலை இல்லை அந்த குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக, மற்றும் கேரள, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும்,ஏலத் தோட்டத்தை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதிக்குள் கேரள எல்லையை திறந்து தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் மக்களை திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் சூளுரைத்தார்.
இப்போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், மாவட்ட பொருளாளர் சேக் பரீத், மாவட்ட துணை செயலாளர்கள் கம்பம் கலில், அம்ஜத் மீரான், தேவாரம் அபுதாஹிர், பெரியகுளம் காஜா நஜும்தீன், பெரிய குளம் ஒன்றிய செயலாளர் சித்திக், மாணவர் இந்திய தேனி மாவட்ட செயலாளர் அசரப் ஒலி, கம்பம் நகர பொருளாளர் ஷாஜ ஹான், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தேனி_மாவட்டம்
29-09-2020