சென்னை.செப்.10., ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பாசிச பிஜேபி மோடி அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (10.09.2018) மாலை 5.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. இதில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் ஜனநாயகத்திற்கு எதிரான கொள்கைகளை நிறைவேற்றுவதும், மக்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் வைகையிலும், தொடர்ந்து எழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய பாசிச பாஜக அரசை கூடியவிரையில் தேர்தலில் தோற்க்கடித்து வீட்டிற்கு அனுப்பி வைப்போம் என்று கண்டன உரை நிகழ்த்தினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் என்.ஏ.தைமிய்யா , ஜே.சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் மாநில தலைவர் பம்மல் சலீம், மாநில பொருளாளர் முஹம்மது இக்பால், மனித உரிமை அணி மாநில செயலாளர் சிந்தா மதார், மாநில கொள்கை விளக்க பேச்சாளர் குணங்குடி மீரான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நூல்களை வாசிக்கும் சமூகத்தை உருவாக்கிட வேண்டும்..! தோப்புத்துறை நூலக திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!!
வேதை.செப்.09., தோப்புத்துறையில் தொழில் அதிபர் சுல்தான் ஆரிப் அவர்களின் ஒத்துழைப்போடு ,துபை சங்கம் சர்பில் புதிய நூலகம் ஒன்று திறக்கப்பட்டது. அதில் பேசிய சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் , முஸ்லிம் சமூகம் வழங்கிய அறிவு கொடைகளை வரலாற்று ரீதியாக எடுத்து வைத்து உரையாற்றினார். தமிமுன் அன்சாரி MLA அவர்களை இளம் தலைவர் என்றும், அறிவாளி என்றும் பாராட்டியவர் அவருக்கும், தனக்கும் 20 ஆண்டு கால நட்பு இருப்பதை சுட்டிக்காட்டி, தோப்புத்துறையின் வரலாற்று சிறப்புகளையும் பட்டியலிட்டார். அடுத்துப் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு... நூல்கள் அறிவை விசாலமாக்குகின்றன. ஒரு நாட்டில் புரட்சியை உருவாக்க வேண்டுமானால் அங்கு முதலில் ஆயுதங்களை அல்ல, புத்தகங்களையே இறக்குமதி செய்ய வேண்டும். துப்பாக்கியை விட வலிமையானவை நூல்கள். நான் இதுவரை படிக்காத ஒரு நூலை எனக்கு தருபவர் தான் , எனது விருப்பத்திற்கு உரியவர் என்றார் அபிரகாம் லிங்கன். நூலகங்கள் இல்லாத ஊர்கள் ஊரே அல்ல என்றார் லெனின். பேரறிஞர் அண்ணா அவர்கள், தனக்கு அறுவை கிசிச்சை செய்யப்படுவதற்கு முன்பாக ,ஒரு நாள் அதை தள்ளிப் போட முடியுமா?
நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அனுப்பிய வெள்ள நிவாரண பொருட்கள்..! கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் வழங்கப்பட்டது…!!
நாகை.செப்.08., நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்களால் திரட்டப்பட்ட ரூபாய் 2,50,000 மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள், கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா தாலுக்கா, கடங்கலூர் ஊராட்சி, முப்பத்தடம் கிராமத்திற்குட்பட்ட 250 குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சரும், களமச்சேரி தொகுதி MLA V.K. இப்ராஹீம் குஞ்சு, முப்பத் தடம் கிராம முஸ்லிம் ஜமாத் செயலாளர் சாஜஹான், பிரைமரி முஸ்லிம் லீக் செயலாளர் இஸ்மாயில், பிரைமரி முஸ்லிம் லீக் துணை செயலாளர் அஷ்ரப், கடங்கலூர் ஆண்டனி மாஸ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் M. பரகத் அலி, மா.து. செயலாளர் ஜாஹீர் உசைன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மு.மா.து.செயலாளர் ஹமீது ஜெகபர், மஞ்சகொல்லை கிளை செயலாளர் சேக் அலி, வவ்வாலடி கிளை செயலாளர் சாகுல் ஹமீது, மஞ்சகொல்லை கிளையை சேர்ந்த 3 சகோதரர்கள் , பொரவாச்சேரி கிளையை சேர்ந்த 5 சகோதரர்கள் , மருங்கூர் பிரவின் குமார் ஆகியோர் கேரளா சென்று பொருட்களை நேரில் வழங்கியது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 08.09.2018
காங்கிரஸ் அறிவித்த பந்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு..!
(மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) வரலாறு காணாத பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வால் நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றை தாண்டி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் இந்த அநியாய விலை உயர்வை கண்டித்து செப்டம்பர்.10 அன்று காங்கிரஸ் கட்சி அழைப்புவிடுத்திருக்க கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அதன் மாநில தலைமை ஆதரவு கேட்ட நிலையில் மஜக ஆதரவு அளிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அந்த பந்த் வெற்றியடைய அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 08.09.2018
பேரறிவாளன் விடுதலைக்காக காத்திருக்கிறோம்! திருப்பூர் மஜக பொதுக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
திருப்பூர்.செப்.08., திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமையில், மாவட்ட பொருளாளர் S.முஸ்தாக் அகமது வரவேற்புரையுடன் மக்கள் எழுச்சியோடு நேற்று (07.09.2018) மாலை நடைப்பெற்றது. இதில் மாநில துணைச்செயலாளர் ஷமீம் அகமது பேசும்போது, #பாசிச_பாஜக_ஓழிக என்று முழக்கம் எழுப்பிய சோஃபியாவிற்கு ஆதரவாக, நாடு முழுக்க மக்கள் ஆதரவு திரண்டிருப்பதை சுட்டி காட்டி, இதுதான் இன்றயை இந்திய அரசியல் என்பதாக பேசினார். அடுத்து பேசிய துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சமீபத்தில் #கோவையில்_ஐந்து_முஸ்லிம்_இளைஞர்கள் மீது நாடக வழக்கு பதிவு செய்யப்பட்டு UAPA சட்டம் பாய்ச்சப்பட்டுருப்பதை கண்டித்து பேசினார். அடுத்து பேசிய திருப்பூர் #தெற்கு_தொகுதியின்_அதிமுக_MLA_குணசேகரன் அவர்கள் உலகளாவிய பிரச்சனைகளை எல்லாம் உதாரணம் காட்டி சட்டசபையில் பேசக்கூடியவர், உங்கள் #பொதுச்செயலாளர்_தமிமுன்_அன்சாரி என்று பாராட்டினார், திருப்பூரில் மஜக சமூக நல்லிணக்க கூட்டத்தை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றவர், #மஜக_மற்ற_கட்சிகளை_விட_மாறுப்பட்டது என்று புகழ்ந்தார். தனக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்த போது, இன்ஸ்சுரன்ஸ் மூலம் கிடைத்த ஏலரை லட்சத்தை சேர்த்து பத்து லட்சத்தை, தனது தொகுதியில் கபரஸ்தானுக்கு இடம் வாங்க தருவதாக பலத்த கைத் தட்டலுக்கு இடையே அறிவித்தார். நேதாஜி