You are here

காங்கிரஸ் அறிவித்த பந்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு..!

(மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..)

வரலாறு காணாத பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வால் நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றை தாண்டி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த அநியாய விலை உயர்வை கண்டித்து செப்டம்பர்.10 அன்று காங்கிரஸ் கட்சி அழைப்புவிடுத்திருக்க கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அதன் மாநில தலைமை ஆதரவு கேட்ட நிலையில் மஜக ஆதரவு அளிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அந்த பந்த் வெற்றியடைய அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
08.09.2018

Top