திருச்சி காஜாமலை அல் ஜமேதுஸ் ஜாதிக் மெட்ரிக் பள்ளியின் 25 ஆம் ஆண்டு விழா.

#திருச்சி_காஜாமலை_ அல்_ஜமேதுஸ்_ஷாதிக்_ மெட்ரிக்_பள்ளியின்_ 25ம்_
ஆண்டு_வெள்ளிவிழா..!

#மஜக_ பொதுச்செயலாளர்_ சிறப்பு_அழைப்பாளராக_ பங்கேப்பு..!!

திருச்சி.ஜன.28.,திருச்சி காஜாமலையில் அல் ஜமேதுஸ் ஷாதிக் மெட்ரிக் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவில்..

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

உரையில்..
இந்த நிகழ்ச்சியில் நம்முடைய தாய்மார்கள் அதிகளவில் அமர்திருக்கின்றார்கள். நீங்கள் கவனிக்க வேண்டும். பெற்றோர்கள் என்று சொன்னால் தந்தைகள் தான் அதிகமாக வந்திருக்க வேண்டும்.
இங்கே தாய்மார்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிக சமுதாய விழிப்புணர்வு இங்குதான் ஏற்பட்டு இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது, முஸ்லிம் சமுதாயம் பெண்களை அடக்கி ஒடுக்குகிறது என்று பொய் பிரச்சாரங்களை செய்துகொண்டு இருக்கிறார்களே அவர்கெல்லாம் இது போன்ற அவைகளுக்கு வந்து பார்க்க வேண்டும். இங்கே ஆண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் அளவிற்கு நிலை இருக்கிறது. பெண்கள் தாரளமாக குவிந்து இருக்கிறார்கள் என மஜக பொதுச்செயலாளர் பேசும் போது அவையில் அனைவரும் கைதட்டி ஆர்வத்துடன் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மஜக விவசாய அணியின் மாநில
செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், துணைச் செயலாளர் திருச்சி சேட்
திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, பொருளாளர் அஷ்ரப் அலி,
துணைச் செயலாளர்கள் ரபீக், ஷேக்தாவூத், ஜம் ஜம் பஷீர், மருத்துவ அணி மொய்தீன் அப்துல் காதர் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாவட்டம்.
28.01.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.