குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக செப்டம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குவைத் சிட்டி பாலிவுட் உணவகத்தில் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது மஜகவின் மார்க்க பிரிவாம் இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP சார்பாக கடந்த ரமலான் மாதத்தில் நடைபெற்ற தொடர் காணொளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையேற்று தொகுத்து வழங்க மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முகம்மது அவர்கள் கிராத் ஓதி துவக்கியத்துடன் இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்ணை தோழர்கள் பிரச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோ.முகவை அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு இதுபோன்று இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார் இதில் வெற்றிபெற்ற மொத்தம் 8 நபர்களில் குவைத்தில் உள்ள 6 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தாயகத்தில் உள்ள 2 வெற்றியாளர்களுக்கு பரிசுகளை நேரடியாக அவர்களது முகவரிக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது #பரிசுகள்_பெற்ற_வெற்றியாளர்கள் : - நிரவி ஹாஜா நஜ்முதீன், குவைத் -
Month:
இந்திய விடுதலை போராட்ட மாவீரர் திப்பு சுல்தான் விருது பெற்ற கோவை மஜகவினர்!
கோவை பூமார்க்கெட் ஹைதர்அலி திப்பு சுல்தான் பள்ளி வளாகத்தில் புணர் நிர்மாணம் மற்றும் கொரோனா காலத்தில் சேவையாற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மனிதநேய ஜனநாயக கட்சிக்கு பள்ளி வாசல் நிர்வாகத்தின் சார்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஏவுகணையின் தந்தை மாவீரன் திப்பு சுல்தான் விருதை மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது, அவர்கள் வழங்கினார். மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையிலான நிர்வாகிகள் விருதை பெற்றுக்கொண்டனர். இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR. பதுருதீன், தொழிற்சங்க மாவட்டதலைவர் அப்துல் சமது, மாவட்ட செயலாளர் ஷாஜகான், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து MJTS தொழிற்சங்கத்தினர், மஜக வின் பல்வேறு பகுதி, கிளை, நிர்வாகிகள் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 23.09.2021
திருச்சி மஜக நிர்வாகி இல்ல திருமண விழா! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ரபீக் அவர்களின் மகள் ஷாஜிதா, மணமகன் சைபுல்லாஹ், திருமணம் கோல்டன் மஹாலில் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், பொருளாளர் அந்தோணி ராஜ், துணை செயலாளர்கள் சையது முஸ்தபா, முஹம்மது பீர்ஷா, அன்வர் பாஷா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராகிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது அகமது, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 24.09.2021
மஜக புருனை மண்டல நிர்வாகி இல்லத் திருமணம்… தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் மற்றும் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன் பங்கேற்று வாழ்த்து!
மஜக புருனை மண்டல நிர்வாகி ஜாகிர் உசேன் அவர்களின் மகள் மணமகள் J.ஆயிஷா நூரத் மணமகன் A. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் திருமணம் ஆவூர் ஜாமியா மஸ்ஜிதில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் மற்றும் மாநில செயலாளர் நாச்சிக்குளம்.தாஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந் நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 22.09.21
நாச்சிக்குளத்தில் ரயில்வேதுறை சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி! மஜக சார்பில் கையெழுத்து இயக்கம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு!
திருவாரூர் மாவட்டம் நாச்சி குளத்தில் ரயில்வே துறை சார்ந்த மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஜான் முகமது,அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், அவர்கள் பங்கேற்று ரயில் நிலையத்தில் செய்யவேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்து உரையாற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,தோழமை கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 21.09.2021