இந்திய விடுதலை போராட்ட மாவீரர் திப்பு சுல்தான் விருது பெற்ற கோவை மஜகவினர்!

கோவை பூமார்க்கெட் ஹைதர்அலி திப்பு சுல்தான் பள்ளி வளாகத்தில் புணர் நிர்மாணம் மற்றும் கொரோனா காலத்தில் சேவையாற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மனிதநேய ஜனநாயக கட்சிக்கு பள்ளி வாசல் நிர்வாகத்தின் சார்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஏவுகணையின் தந்தை மாவீரன் திப்பு சுல்தான் விருதை மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது, அவர்கள் வழங்கினார்.

மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையிலான நிர்வாகிகள் விருதை பெற்றுக்கொண்டனர்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR. பதுருதீன், தொழிற்சங்க மாவட்டதலைவர் அப்துல் சமது, மாவட்ட செயலாளர் ஷாஜகான், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்ந்து MJTS தொழிற்சங்கத்தினர், மஜக வின் பல்வேறு பகுதி, கிளை, நிர்வாகிகள் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
23.09.2021