சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்!! மதுரை மஜகவினர் திடீர் சாலை மற்றியல்..!

மதுரை மாநகர வடக்கு மண்டல 14-வது வார்டு ஆர்.வி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைத்து சாலையில் இருபுறமும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மதுரை மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும்.

மதுரை மாநகர மனிதநேய ஜனநாயக கட்சினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர்க்கால அடிப்படையில் அப்பணிகளை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிகழ்வில் மஜக தொழிற்சங்க மாநில பொருளாளர் கனி, மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சசி மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.