அமைச்சர்களுடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு!

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் மஜக-வினர் தீவிரமாக களமாடி வருகின்றனர்.

தற்போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் பரப்புரையும் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் பணிகளை முன்னிட்டு அமைச்சர்கள் திரு. முத்துசாமி, திரு. செந்தில் பாலாஜி ஆகியோரையும் அவர் சந்தித்து தேர்தல் கள நிலவரம் குறித்து விவாதித்தார்.

அப்போது துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செய்யது அகமது பாருக், தேர்தல் பணிக்குழு துணைத் தலைவரும், மாநில துணைச் செயலாளருமான பாபு ஷாஷின்சா, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சபிக் அலி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநவாஸ், IT மண்டல செயலாளர் எஹ்சானுல்லா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

அமைச்சர்கள் மஜக-வின் தேர்தல் பணிகள் மிக சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டினர்.