ஈரோடு இடைத்தேர்தல்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தீவிர பரப்புரை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செய்யது அகமது பாருக், மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு துணை தலைவருமான பாபு ஷாகின்ஷா ஆகியோரும் பங்கேற்றனர்,

கருங்கள்பாளையம் கலைஞர் நகரில் பேசிய அவர், நீங்கள் கை சின்னத்திற்கு அளிக்கும் வாக்கு என்பது திராவிட மாடல் ஆட்சிக்கு அளிக்கும் சான்று என பேசினார்.

200-க்கும் மேற்பட்ட மஜகவினர் கொடிகளுடன், எழுச்சியுடன் சுற்றி வந்தனர். இதை கண்ட EVKS.இளங்கோவன் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மஜக-வினரை பாராட்டினார்.

பொதுச்செயலாளரிடம் இன்னொரு நாளையும் பரப்புரைக்கு ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, முன்னால் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், முகம்மது சகி Ex MP, அவர்களும் உடன் இருந்தனர்.

மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சபிக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநவாஸ், சேலம் மாவட்ட செயலாளர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கொடிவேரி சாதிக், பொதக்குடி ஜெய்னூதீன், கருர் மாவட்ட துணை செயலாளர் உவைஸ் அஹமது, IT WING மண்டல செயலாளர் எஹ்சானுல்லா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.