(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் மே தின வாழ்த்துச் செய்தி)
உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாக மே தினம் மே-01 அன்று கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் தொழிலாளர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்த போராட்டத்தில் கிடைத்த தியாக பூர்வமான வெற்றியே #மே_தின-மாக தொழிலாளர் வர்க்கத்தால் போற்றப்படுகிறது.
உலக தொழிலாளர்களின் வியர்வையாலும், இரத்தத்தாலும் தான் புதிய, புதிய முன்னேற்றங்களையும், வளர்ச்சிகளையும் உலகம் கண்டு மகிழ்கிறது.
இன்று சந்தை பொருளாதார யுகத்தில், கருவி மயமாகும் காலச்சூழலில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க சபதமேற்போம்.
உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
01.05.2018