வேலூர்.ஏப்.30.,வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தம் நகரத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் நேற்று (29.04.2018) #SG_அப்சர்_சையத் வருகை புரிந்து மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி சார்பாக வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் பற்றி கீழ்கண்டவாறு விவரித்தார்.,
1.வேலூர் மேற்கு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மஜக இளைஞர் அணி சார்பாக அரசியல் கருத்தரங்கம் நடத்துதல்.
2. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் விரைவாக நடத்தி பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்களை கட்சியில் இணைத்தல்.
3.வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் இளைஞரணி நிர்வாகிகளை மிக விரைவாக நியமித்தல்.
4. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க , பசுமையான மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க மஜக வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுதல்.
5. மாவட்டம் முழுவதும் நகர் வாரியாக இரத்த தான முகாம் நடத்துதல்.
இதில், வேலூர் மே மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப் ,மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன், குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ், முன்னால் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப் ஆகியோர் மாநில இளைஞர் அணி செயலாளருக்கு சால்வை அணிவித்தனர்.
நகர மற்றும் கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்
29.04.2018