பொதக்குடி தாஜ்தீன் மஜகவில் இணைந்தார்

டெல்டாவின் மூத்த சமூக செயல்பாட்டாளரும், தமுமுக-வின் முன்னாள் தலைமைக் கழக பேச்சாளருமான பொதக்குடி.தாஜுதீன் அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் மஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆற்றல் மிகு பேச்சாளர், களப்பணியாளரான அவரது இணைவு திருவாரூர் மாவட்டத்தில் கட்சிக்கு வலு சேர்க்கும் என தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர் இந்தியாவிலும் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் .தாஜுதீன், மாநிலச் செயலாளர் நாகை. முபாரக், மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி, திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தாகீர், பொதக்குடி கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.