மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
“மக்களுடன் மஜக” செயல் திட்டத்தின்படி இன்று அத்திக்கடையில் ஏரி, குளங்களை பார்வையிட்டு கலெக்டர் இடம் மனு கொடுப்பது குறித்த ஆலோசனைகளை கூறினார்.
பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது….
திருவாரூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியரகம் முன்னெடுக்க வேண்டும்.
சமீபத்தில் பெய்த கன மழையால் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு காத்திருந்த வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கியது போதாது என விவசாயிகள் கூறுகிறார்கள்.
தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து வாடும் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என மஜக தொடர்ந்து போராடி வருகிறது.
இதில் முதல் கட்டமாக நோயாளி கைதிகளையாவது சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு செய்தியாளர்கள் கடலில் 80 கோடியில் கலைஞருக்கு பேனா வைப்பது எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறதே? உங்கள் கருத்து என்ன? என வினவினார்கள்.
அங்கு டெல்லி JNU பல்கலைக் கழகத்தை போல, கலைஞரின் பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்றார்.
பிறகு அத்திக்கடை ஜமாத் அலுவலகத்தில் ஜமாத் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் .தாஜ்தீன், மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், பொருளாளர் ஷேக் அப்துல்லா , கிளை செயலாளர் சலீம் பொருளாளர் ரபீக், IT wing ரிஸ்வான் உடனிருந்தனர்.